மதுரையில் பாஜக தேசியத்தலைவர் நட்டா மீது போலீஸில் காங்கிரஸார் புகார்

மதுரையில் பாஜக தேசியத்தலைவர் நட்டா மீது போலீஸில் காங்கிரஸார் புகார்
X

மதுரை எய்ம்ஸ் குறித்து தவறான கருத்து தெரிவித்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, ஆஸ்டின்பட்டி காவல் நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் புகார் மனு அளித்தனர்

பாஜக தேசியதலைவர் ஜே. பி .நட்டா, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 95% நிறைவடைந்துள்ள தால் பிரதமர் திறந்து வைப்பார் என்றார்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து தவறான கருத்து தெரிவித்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, ஆஸ்டின்பட்டி காவல் நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் புகார் அளித்தனர்.

பாஜக தேசிய தலைவர் ஜே. பி .நட்டா, கடந்த சில தினங்கள் முன்பு மதுரையில் நடைபெற்ற நிர்வாகிகள ஆலோசனைக்கூட்டத்தில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 95% நிறைவடைந்து விரைவில் பிரதமர் திறந்து வைப்பார் எனக் கூறியதால் சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில், 95% நிறைவடைந்த எய்ம்ஸ் மருத்துவமனை எங்கே என்று பதாகைகளுடன் எம்பிகள் மாணிக்கம் தாகூர், சு.வெங்கடேசன் ஆகியோர் பார்வையிட்டனர்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி தகவல் அறியும் உரிமை பிரிவு தலைவர் வக்கீல் கனகராஜ், தகவல் அறியும் உரிமை சட்டப்பிரிவு பொதுச்செயலாளர் சக்திவேல் ஆகியோர் ஆஸ்டின்பட்டி காவல் நிலையத்தில், எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து தவறான கருத்தை பரப்பியதாக,பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா மீது புகார் மனு அளித்தனர்.

தொடர்ந்து ,எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து தகவல்களை தெரிவிக்க சுகாதாரத்துறை மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனை அதிகாரிகள் தான் தெரிவிக்க வேண்டும். ஆனால் , பாஜகவில் தேசிய தலைவர் என்பதால் எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து தவறான கருத்துகளை பரப்ப கூடாது என, காங்கிரஸ் கட்சி தகவல் அறியும் உரிமை பிரிவு தலைவர் கனகராஜ் கூறினார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்