மதுரையில் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் புகார்

மதுரையில் தனியார் பள்ளிகள் மீது  நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் புகார்
X

மதுரை  அனைத்து கிறிஸ்தவ மக்கள் களம் அமைப்பின் செபாஸ்டின் சூசைராஜ் மனு அளித்தார்

ஆர் டி இ முறையில் மோசடி செய்யும் தனியார் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

ஆர் டி இ முறையில் மோசடி செய்யும் தனியார் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மதுரை, காமராஜர் ரோடு, பிபி குளம் பகுதியைச் சேர்ந்தவர் செபாஸ்டின் சூசைராஜ். இவர், அனைத்து கிறிஸ்தவ மக்கள் களம் என்ற அமைப்பில் முக்கிய நிர்வாகியாக உள்ளார். இவர், மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார் .

அந்த மனுவில் கூறியிருப்பதாவது,அனைத்து கிறிஸ்தவ மக்கள் களம் என்ற எங்கள் அமைப்பானது சிறுபான்மையினர் மற்றும் தலித் கிறிஸ்தவ மேம்பாட்டிற்கு பொதுநல நோக்கோடு செயல்படும் அமைப்பாகும். சிறுபான்மை மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சிறுபான்மை சேர்க்கை 50 சதவீதம் இருப்பது அவசியம்.

இதுகுறித்து ,பள்ளி கல்வி ஆணையமும் அரசாணை வெளியிட்டுள்ளது. இது மட்டுமல்லாது, ஆர் டி இ என்பது தனியார் பள்ளிகள் அவசியம் கடைப்பிடிக்க வேண்டியதாகும் என்று அரசு விதியில் உள்ளது .கல்வி கட்டணம் எதுவும் வசூலிக்க கூடாது என்பதும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு கட்டிட விதிமுறைகள், நூலகங்கள் மற்றும் உடன் திறன் சார்ந்த விளையாட்டு மைதானங்கள், கட்டண ரசீது போன்றவை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும்.

ஆனால், மதுரை மாவட்டங்களில் பெரும்பாலான பள்ளிகள் இதை கடைபிடிக்கவில்லை என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக தெரிய வருகிறது.குறிப்பாக, மதுரை நரிமேடு நேரு கல்வி குழுமம், ஜோதி மேல்நிலைப்பள்ளி, தனபால் உயர்நிலைப்பள்ளி, செல்லூர் மனோகரா பள்ளி, தனபால் நடுநிலைப்பள்ளி, உள்ளிட்ட சில பள்ளிகள் மிகவும் முறையற்ற செயல்கள் நடத்தி அரசாங்கத்தை ஏமாற்றி வருகிறது.

மாவட்ட ஆட்சியர் இது குறித்து விசாரித்து மாணவர்களின் கல்வித் திறன் பாதுகாப்பை மாணவ மாணவியர் சேர்க்கை குறித்தும் நடவடிக்கை எடுத்து சட்டத்தை ஏமாற்றி பிழைக்கும் தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் இது போன்ற புகார் கொடுத்தால் கூட்டாக சேர்ந்து கூலிப்படையை ஏவி கொலை செய்து விடுவோம் என மிரட்டல் விடுத்துள்ள சில பள்ளி தாளாளர் மற்றும் சில நிர்வாகிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
பெரியாரிஸ்டுகள் என்னிடம் மண்டியிட்டு பொதுமன்னிப்பு கேட்க வேண்டும்- இடைவிடாமல் தாக்கும் சீமான்..!