ஊதிய உயர்வு பேச்சு வார்த்தை தொடங்க வலியுறுத்தி சிஐடியு தொழிலாளர்கள் போராட்டம்

மதுரை பைபாஸ் சாலையில் உள்ள தலைமை அரசு போக்குவரத்து பணிமனை முன்பாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்கள்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டுமென வலியுறுத்தி சிஐடியு தொழில் சங்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசு தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்களிடம் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை துவங்கிட வலியுறுத்தி, மாநிலம் முழுவதும் உள்ள அரசு போக்குவரத்து பணிமனைகளில் இன்று சிஐடியு - தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தை இன்று தொடங்கியுள்ளனர்.
அரசின் புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட வேண்டும், ஊதிய பேச்சுவார்த்தையை உடனே துவங்க வேண்டும், போக்குவரத்து கழகங்களில் பற்றாக்குறையை ஈடுகட்ட, வரவுக்கும் செலவுக்கும் இடையிலான வித்தியாசத் தொகையை அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், ஓய்வுபெற்றோர் பணபலன், அகவிலைப்படி உயர்வு, மருத்துவ காப்பீடு அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில், உள்ள 16 பணிமனைகளில் 10 பணிமனைகளின் முன்பாக தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மதுரை பைபாஸ் சாலையில் உள்ள தலைமை அரசு போக்குவரத்து பணிமனை முன்பாக போக்குவரத்து ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu