சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் ஆலய விழா: அரிமா சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல்

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் ஆலய விழா: அரிமா சங்கம் சார்பில்  தண்ணீர் பந்தல்
X

சோழவந்தான் அரிமா சங்கம் சார்பில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தல்

Cholavanthan Zenagai Mariamman Temple Festival: Water tank on behalf of Arima Sangam

அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவில் பால்குடம் அக்னிச்சட்டி திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு நகர் அரிமா சங்க தலைவர் டாக்டர் மருதுபாண்டியன் சார்பில் நீர் மோர் மற்றும் அன்னதானம்.வழங்கப்பட்டது.

சோழவந்தான் அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா கடந்த ஜூன் 6ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று காலை முதல் பக்தர்கள் பால்குடம் அக்னி சட்டி எடுத்து கோவிலில் தங்களது நேர்த்தி கடனை செலுத்தி வருகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்களுக்கு சோழவந்தான் நகர் அரிமா சங்க தலைவரும் கல்வியாளரும் 8வது வார்டு கவுன்சிலருமான டாக்டர் மருதுபாண்டியன் சார்பாக நீர் மோர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. அன்னதானம் வழங்கிய அரிமா சங்கத்தை பொதுமக்கள் பாராட்டி சென்றனர்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!