சோழவந்தான் திரௌபதையம்மன் ஆலய விழா: பால்குடம் சுமந்து பக்தர்கள் வழிபாடு

சோழவந்தான் திரௌபதையம்மன் ஆலய விழா: பால்குடம் சுமந்து பக்தர்கள் வழிபாடு
X

சோழவந்தான் திரௌபதையம்மன் கோயிலில் நடைபெற்ற திருவிழாவையொட்டி  பால்குடம் எடுத்துச்சென்ற பக்தர்கள்

சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழாவின் 6-ம் நாள் விழாவில் பீமன் கீசகன் வதம் நடைபெற்றது

மதுரை மாவட்டம், சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா 6-ம் நாள் திருவிழா பீமன் கீசகன் வதம் நடைபெற்றது.

இவ்விழாவை முன்னிட்டு, பீமன் மகாபாரதத்தில் வருவது போல் வேடம் புரிந்து காவடியை பிடித்துக்கொண்டு கெதையுடன் கீசகளை தெருத்தெருவாக விரட்டி பிடிக்கும் காட்சி பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது. பீமன் செல்லக்கூடிய இடமெல்லாம் பக்தர்கள் அபிஷேகம் செய்து,பீமனுக்கு பிடித்த சர்க்கரையால் அரிசியை பிசைந்த(கலந்து) கொடுத்து பீமனிடம் ஆசி பெற்றனர். கோவிலிலிருந்து புறப்பட்டு, நகரில் அனைத்து பகுதியிலும் வலம் வந்து, கோவிலை வந்தடைந்தனர்.

கோவில் முன்பாக மாவிளக்கு எடுத்து பூஜைகள் செய்தனர். ஞாயிற்றுக்கிழமை இரவு அர்ஜுனன் தபசு நடந்தது. திங்கட்கிழமை இரவு அம்மன் சிங்கவாகனத்தில் எழுந்தருளி காளிவேடம் புரிந்து 4 ரதவீதியில் பவனி வருதல், இரவு அரவான் பலி கொடுத்து கருப்புசாமி வேடம் புரிந்து காவல் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை நேற்று காலை பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர் இரவு அம்மன் புறப்பாடு திரௌபதியிடம் புரிந்து நான்கு ரத வீதியில் பவனி வந்து துரியோதனனின் குடலுருவி மாலை போட்டு அம்மன் சபதத்தை முடித்து கூந்தல் முடித்தல் நடந்தது அனைவருக்கும் மல்லிகைப்பூ வழங்கினார்கள். இன்று மாலை 5 மணி அளவில் மண்டலத்தில் பூக்குழி விழா நடைபெற இருக்கிறது.

இரவு அம்மன் காமதேனு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெறும். சோழவந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவபாலன், சப் இன்ஸ்பெக்டர் மணி தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்தனர். சுகாதாரப் பணி, கூடுதல் தெருவிளக்கு குடிநீர் வசதி சோழவந்தான் பேரூராட்சி நிர்வாகம் செய்திருந்தது .விழா ஏற்பாடுகளை, திருக்கோவில் நிர்வாகம் மற்றும் உபயதாரர் செய்து வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!