சோழவந்தான் பேச்சி அம்மன் கோவில் பொங்கல் திருவிழா

சோழவந்தான் பேச்சி அம்மன் கோவில் பொங்கல் திருவிழா
X

மதுரை அருகே சோழவந்தானில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

மதுரை அருகே சோழவந்தான் பகுதி செய்தி தொகுப்பை இங்கே காணலாம்

சோழவந்தான் அருகே அயன் குருவித்துறை பேச்சி அம்மன் கோவில் பொங்கல் திருவிழா மூன்றாம் ஆண்டு மண்டகப்படி நடைபெற்றது.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், சோழவந்தான் அருகே அயன் குருவித்துறை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு பேச்சியம்மன் கோவில் பொங்கல் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது 60 ஆண்டுகளுக்கு பிறகு தொடர்ச்சியாக மூன்றாம் ஆண்டாக நடைபெறும் மண்டகப்படியானது எஸ். எஸ். எஸ். நாகூரான் பிள்ளை மனைவி என். விஜயலட்சுமி அம்மாள்என். சோலைமலை செல்வன், என்.முருகானந்தம், என் சிவானந்தம் குடும்பத்தாரின் ஏற்பாட்டில் நடந்தது. இதில், சுற்றுப்புற கிராமப் பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

முதல் நாள் அம்மன் வீதி உலா, வான வேடிக்கை, நையாண்டி மேளத்துடன் அம்மன் மண்டகப்படி வந்து சேர்ந்தது. தொடர்ந்து இரவு கரகாட்டம் நடைபெற்றது. இரண்டாம் நாள் அம்மன் பூஞ்சோலை வந்து சேருதலும், பின்னர் முளைப்பாரி ஊர்வலமும் நடைபெற்றது .இதில் திரளான பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர். இதை தொடர்ந்து அருகில் இருந்த வைகை ஆற்றில் முளைப்பாரி கரைக்கப்பட்டது .தொடர்ந்து இரவு கோவில் முன்பு வள்ளி திருமணம் நாடகம் நடைபெற்றது.

சோழவந்தான்அருகேதென்கரையில் தீயணைப்பு துறையினர் ஒத்திகை நிகழ்ச்சி :

அக்டோபர் 13ஆம் தேதி உலக பேரிடர் தணிக்கை நாளாக மாநில மற்றும் தேசிய அளவில் கொண்டாடப்பட்டு வருவதை முன்னிட்டு சோழவந்தான் அருகே தென்கரை வைகை பாலத்தில் தென்கரை வருவாய் ஆய்வாளர் சதீஷ் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர்கள் தென்கரை ஜெகதீஷ், முள்ளிப்பள்ளம் பிரபாகரன், மன்னாடிமங்கலம் வெங்கடேசன், குருவித்துறை முபாரக் சுல்தான் ஆகியோர் முன்னிலையில், கனமழையால் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளில் பொதுமக்கள் முன் எச்சரிக்கை விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

இதில் நிலைய போக்குவரத்து அலுவலர் கண்ணன் தலைமையில், தீயணைப்பு நிலைய தீயணைப்பு படையினர் ஒத்திகை நிகழ்ச்சியை நடத்திக் காட்டினர் இதில் கிராம மக்கள் கிராம உதவியாளர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். நிலையை எழுத்தர் பெரியசாமி நன்றி தெரிவித்தார்.

Tags

Next Story