மதுரையில் நெகிழி குடுவையை வித்தியாசமாக பயன்படுத்தும் சிறார்கள்!
தூக்கி வீசப்பட்ட நெகிழி குடுவைகவைகளில் பல்லுயிர்களுக்கு தண்ணீர், தானியம்:
மதுரை:
கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் இந்த சூழலில் பல்லுயிர்கள் (பறவைகள், அணில்கள்,சிறு உயிரினங்கள்) தண்ணீர் கிடைக்க மிகவும் சிரமப்படும்.
மனிதன், தண்ணீர் குடித்துவிட்டு சாலையில் தூக்கி வீசிய நெகிழிக் குடுவைகள் மண்ணிற்குள் சென்று மக்காத நிலை ஏற்படும் முன் அவற்றினை, சேகரித்து,அவற்றில் தானியங்கள், மற்றும் தண்ணீர் நிரப்பி நாம் தினமும் செல்லக்கூடிய பகுதிகளில் மரங்களில் வைத்து வரும் பணி இன்று சேவாலயம் மாணவர்கள் இல்லத்தில் மாணவர்களுக்கு, நெகிழி குறித்து எடுத்துரைத்து மாணவர்களது கரங்களினால் துவங்கினேன். இப்பணியின் மூலமாக பல்லுயிர்களும் பயன்பெறும் இயற்கையினை பாதுகாக்க முடியும். இதுபோல அனைத்து பகுதிகளிலும் நெகிழியை சாலைகளில் வீசாமல் வேறு பயன்பாட்டுக்கு பயன்படுத்தலாம் அத்துடன் இது சிறு உயிரினங்களுக்கு மிகவும் பயன்பாடாக உள்ளது கோடை காலங்களில் தண்ணீர் செடிகளையும் பறவைகளுக்கு இந்த நெகிழி குழுவை மிகவும் பயனுள்ளதாக உள்ளதாக, தெரிவித்தனர் சமூக ஆர்வலர்கள்.
இதை அனைத்து பகுதிகளில் கடைபிடித்தால், சிறு பிராணிகளுக்கு உதவ வாய்ப்புண்டு என்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu