மதுரை சிம்மக்கல் அரசு பொது நூலகத்தை, முதல்வர் பார்வையிட வேண்டும்: அதிமுக கோரிக்கை

மதுரை சிம்மக்கல் அரசு பொது நூலகத்தை, முதல்வர் பார்வையிட வேண்டும்: அதிமுக கோரிக்கை
X

முன்னாள் அமைச்சர் ஆர் .பி .உதயகுமார் கலந்துகொண்டு தீர்மான நோட்டுகளை கிளைக் கழக நிர்வாகிகளிடம் வழங்கினார்.

மாவட்ட மைய நூலகத்தை முதல்வர் நேரில் ஆய்வு செய்ய வேண்டுமென முன்னாள் அமைச்சர் ஆர் பி .உதயகுமார் கோரிக்கை விடுத்தார்

மதுரை சிம்மக்கல்லில், உள்ள மாவட்ட மைய நூலகத்தை முதல்வர் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கோரிக்கை விடுத்தார்

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட ,அதிமுக வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய கழகம் சார்பில் கச்சைகட்டியில், கிளைக் கழக நிர்வாகிகளுக்கு தீர்மான நோட்டு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் ஆர் .பி .உதயகுமார் கலந்துகொண்டு தீர்மான நோட்டுகளை கிளைக் கழக நிர்வாகிகளிடம் வழங்கினார்.தொடர்ந்து பேசிய, ஆர். பி .உதயகுமார் இன்று மாலை மதுரை வரும் தமிழக முதல்வர் சிதலமடைந்து உள்ள மதுரை சிம்மக்கல்லில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும்.மற்றும் மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

இதில் ,உசிலம்பட்டி எம்.எல்.ஏ .ஐயப்பன், வாடிப்பட்டி வடக்கு ஒன்றியச்செயலாளர் மு காளிதாஸ், தெற்கு ஒன்றியச் செயலாளர் கொரியர் கணேசன், அலங்காநல்லூர் ஒன்றியச் செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் திருப்பதி, மாணவரணி செயலாளர் மகேந்திரன், பாண்டி ,வாடிப்பட்டி யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா, வாவிட மருதூர் குமார் மற்றும் வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் மணிமாறன், கோட்டைமேடு பாலா, ரவி, மலைச்சாமி, பிச்சை மாணிக்கம், செந்தில்குமார், குழந்தைவேலன், மூர்த்தி, சுரேஷ் ,சந்திர போஸ், ராமநாதன், ஜெயராமன், பிரீத்தி, விவசாய பிரிவு வாவிடமருதூர் குமார், கேட்டு கடை முரளி, கேபிள் மணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர் .

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!