பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு தடுக்க வேண்டும்: மாணிக்கம் தாகூர் எம்.பி.
விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக்கம்தாகூர்
எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை விமர்சனம் செய்வது மோடியின் குழந்தை தனத்தை காட்டுகிறது என்றார் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர்:
பெட்ரோல், டீசல் - கேஸ் சிலிண்டர் மீதான விலையை மத்திய அரசு தொடர்ந்து உயர்த்தி வருவதை கண்டிக்கும் விதமாக, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மற்றும் அதன் கூட்டணிக் கட்சி சார்பாக இன்று நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது.
திமுக மற்றும் தோழமைக் கட்சியின் சார்பில் பெட்ரோல் டீசல் விலையை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதேபோல், மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவிற்கு உட்பட்ட திருநகர் பகுதியில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக் தாகூர் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்டோர், சமூக இடைவெளியை கடைபிடித்து முகக்கவசம் அணிந்து, கருப்புக்கொடி ஏந்தி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தியாவில் ஒரே நாளில் 2 கோடி பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டது காங்கிரஸ் கட்சியினருக்கு காய்ச்சல் வந்துவிட்டது என மோடி பேசியது அவருடைய குழந்தைத்தனத்தைக் காட்டுகிறது.பொதுமக்களுக்கு தடுப்பூசி வழங்காமல், மத்திய அரசு வஞ்சிக்கிறது அதை எடுத்துக் கூறுவது எதிர்க்கட்சியின் கடமை. இந்தக் கடமையை நக்கல் செய்வது மோடியின் பெருந்தன்மையா அல்லது குழந்தைத்தமா எனத்தெரியவில்லை. எதிர்க்கட்சியின் பணி அரசாங்கத்தின் குறைகளை எடுத்துக்கூறுவதுதான். இந்தப் பணியை செய்ய கூடாது என்பது மோடியின் சர்வாதிகாரத்தை காட்டுகிறது.
பெட்ரோல் டீசல் மீதான வரி ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் வராது என மத்திய நிதியமைச்சர் கூறியது. பாஜக மற்றும் அதன் கூட்டணிகட்சி அரசின் ஒரு அங்கமாக ஜிஎஸ்டி கவுன்சில் மாறி இருக்கிறது. மோடி, அமித்ஷா அரசு இந்தியா முழுவதும் அகற்றப்பட்ட பின் உண்மையான பெட்ரோல்-டீசல் விலை குறைக்கப்பட்டு ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வரப்படும் நிலை உருவாக்கப்படும்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாணவர் சேர்க்கை தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை செயலாளர் பூஷன் மாணவர் சேர்க்கைக்கு, மாநில அரசுதான் இடம் ஒதுக்க வேண்டும், மாணவர் பயில்வதற்கான இடம் மற்றும் வசதிகளுக்கான நிதி யார் தருவார் என மாநில அரசு கேட்கிறது. மத்திய-மாநில அரசின் சுகாதாரத்துறை செயலாளர்கள் இருவரும் இணைந்து பேசி இந்த ஆண்டு நவம்பர் 15ஆம் தேதிக்குள் மாணவர் சேர்க்கை முடிய உள்ளது. அதற்குள் நல்லதொரு முடிவை உருவாக்க வேண்டும் என மத்திய-மாநில அரசிடம் கேட்டுக் கொள்கிறேன்.
எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிட வடிவமைப்பு 2026-ல் கட்டி முடிக்கப்படும். தற்போது, மருத்துவமனை கட்டிட வடிவமைப்பு தயாராக உள்ளது. தமிழகத்தில் இருதுருவ அரசியலாக மாறி பல நாட்கள் ஆகிறது., மூன்றாவது அணிக்கான பங்கேற்பு என்பது 15 சதவீதம் மட்டுமே., இரு அணிகளுக்கான போட்டியில் மக்களுடைய தேர்வு என்பது தெரியவில்லை., உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளர்களுடைய தேர்வு மிக மிக முக்கியம்.
இந்த, உள்ளாட்சி மன்ற தேர்தலில் ஊராட்சி மன்ற தலைவராக புதிய கட்சியை சார்ந்தவர்கள் வரலாம், கட்சி சாராத சுயேச்சை வேட்பாளராக புதிய கட்சி நிர்வாகிகள் வரலாம், ஜனநாயகத்தில் புதிதாக போட்டியிடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை வரவேற்கலாம் என்றார் மாணிக்கம்தாகூர் எம்பி.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu