சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர் திறப்பு..!

சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் :  முன்னாள் அமைச்சர் திறப்பு..!
X

சோழவந்தானில் ,அதிமுக சார்பில் குடிநீர் பந்தல் திறப்பு.

கோடை வெயிலை சமாளிப்பதற்காக பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அதிமுக சார்பில் சோழவந்தானில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.

கோடை வெயிலை சமாளிப்பதற்காக பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அதிமுக சார்பில் சோழவந்தானில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் பங்கேற்றனர்.

சோழவந்தான்:

மதுரை, சோழவந்தானில், அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் ஆர் வி உதயகுமார் நீர் மோர் பந்தலை தொடங்கி வைத்தார்.

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம், வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய கழகம் சார்பில் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு நீர் மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்கு, வாடிப்பட்டி தெற்குஒன்றிய கழகச் செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், தேனி நாடாளுமன்ற வேட்பாளர் வி.டி. நாராயணசாமி, அமைப்புச் செயலாளர் இ.மகேந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ,கருப்பையா, மாணிக்கம் , மாநில அம்மா பேரவை நிர்வாகி, தனராஜன், ராஜேஷ் கண்ணா, மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார் ஒன்றிய கழகச் செயலாளர் செல்லம்பட்டி ராஜா, மகளிர் அணி மாவட்ட செயலாளர் லட்சுமி மற்றும் இலக்கிய அணி செல்லம்பட்டி ரகு பேரூர் செயலாளர் முருகேசன் முன்னாள் பேரூராட்சித் தலைவர் எம். கே. முருகேசன், ஒன்றிய கவுன்சிலர்கள் கருப்பட்டி தங்கபாண்டி, தென்கரை ராமலிங்கம், பேரூராட்சி கவுன்சிலர்கள் டீக்கடை கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
why is ai important to the future