வாடிப்பட்டியில் மின்கட்டண உயர்வைக் கண்டித்து பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்

வாடிப்பட்டியில் மின்கட்டண உயர்வைக் கண்டித்து பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்
X

வாடிப்பட்டியில் மின் கட்டண உயர்வு கண்டித்து  பா.ஜ.க. சார்பில்  ஆர்ப்பாட்டம் நடந்தது.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் மின்கட்டண உயர்வைக் கண்டித்து பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேருந்து நிலையம் எதிரே தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து வாடிப்பட்டி ஒன்றிய பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் வாசு தேவன் தலைமை தாங்கினார். மதுரை புறநகர் மாவட்ட துணைத்தலைவர்கள் கோவிந்த மூர்த்தி, பாலமேடு கண்ணன், முருகேஸ்வரி ஆகியோர் தி.மு.க. அரசுக்கு எதிராக மின் கட்டண உயர்வை கண்டித்து கண்டன உரையாற்றினார்கள் .

சோழவந்தான் சட்டமன்றத் தொகுதி ஒன்றிய தலைவர்கள் அசோக் குமார், தங்கதுரை, அழகர்சாமி மற்றும் மூத்த காரியகர்த்தர்கள் மாயாண்டி, முத்துமணி, சீதாராமன், முத்துராமன், சசிகுமார், ராஜாராமன் தும்மரைன்.முருகேசன், சேதுராமன், வடக்கு பொதுச் செயலாளர்கள் வழக்கறிஞர் விஜயகுமார், கண்ணன் மற்றும் மேலக்காலை சேர்ந்த அமைப்புசாரா தொழிலாளர் பிரிவு மீன் கடை முருகேசன், ஒன்றிய பிரிவு மாவட்ட நிர்வாகிகள் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.மின் கட்டணத்தை உயர்த்தி மக்களின் மீது சுமையை ஏற்படுத்தி வரும் தமிழக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பா.ஜ..க வினர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வாடிப்பட்டி போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil