மதுரை அருகே கார் மோதி பைக்கில் சென்றவர் உயிரிழப்பு: கிரைம் செய்திகள்..

மதுரை அருகே கார் மோதி பைக்கில் சென்றவர் உயிரிழப்பு: கிரைம் செய்திகள்..
X
மதுரை அருகே கார் மோதி பைக்கில் சென்றவர் உயிரிழப்பு உள்ளிட்ட கிரைம் செய்திகள்..

மதுரை அருகே சிலைமான் சங்கையா கோயில் தெருவை சேர்ந்தவர் கண்ணன் 51.இவர் பைக் ஓட்டிச் சென்றார் . இவர் ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை சிலைமான் சிலைமான் சந்திப்பு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது சிவகங்கையைச் சேர்ந்த ரமேஷ்குமார் என்பவர் ஓட்டிச்சென்ற கார் அவர் மீது மோதியது .இதில், அவர் தலைக்குப்புற கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

இந்த விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டிச் சென்ற ரமேஷ் குமார் காரை நிறுத்தாமல் வேகமாக அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றார். அப்போது மற்றொரு பைக்கில் சென்ற சிவகங்கை மாவட்டம் வேம்பத்தூர் லட்சுமிபுரத்தைச் சேர்ந்த மலை கருப்பன் மான்களான ராஜா 38 சுந்தர் 32 ஓட்டிச் சென்ற பைக்கின் மீது மோதி மீண்டும் விபத்தானது. இதில் அவர்கள் இருவரும் படுகாயம் அடைந்தனர் .

இதை தொடர்ந்து கார் மற்றொரு இடத்தில் மோதி நின்றது. இந்த விபத்தில் இறந்த கண்ணன் உடலை மதுரை அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். படுகாயம் அடைந்த சுந்தர்,ரமேஷ்குமார் இருவரும் அரசு மருத்துவபனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து, சிலைமான் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண் தூக்கிட்டு தற்கொலை

திருமங்கலம் அண்ணா நகர் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் கருப்பையா மனைவி சுப்புலட்சுமி 51. இவருக்கு சுகர் மற்றும் ரத்த அழுத்த நோய் இருந்து வந்தது . கடந்த ஆறு வருடங்களாக அதற்கான சிகிச்சையும் பெற்று வந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்து வந்தவர் உயிரை வைத்துக் கொள்வதை விட தற்கொலை செய்து கொள்ளலாம் என்று அடிக்கடி புலம்பிவந்துள்ளார். இந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவர் கணவர் கருப்பையா திருமங்கலம் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து சுப்புலட்சுமியின் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.

கணவர் தீக்குளித்து தற்கொலை

கருப்பாயூரணி வி.ஓடைப்பட்டியை சேர்ந்தவர் விஜயன் 36.இவர் மனைவி காவேரி.இவர்களுக்கு திருமணமாகி 12 வருடங்கள் ஆனது.இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கணவர் மனைவிக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.இதனால், கணவரைப்பிரிந்து மனைவி தனியாக வசித்து

வந்தார்.இதனால், மனமுடைந்த கணவர் விஜயன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிதார்.உயிருக்கு போராடிய நிலையில், அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து அவர் மனைவி காவேரி ஒத்தக்கடை போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப் பதிவுசெய்து, விஜயனின் தள்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.

கடன் தொல்லையால் லோடுமேன் தூக்குப்போட்டு தற்கொலை

ஜெய்ஹிந்துபுரம் சோலையழகுபுரம் மூன்றாவது தெரு ஆட்டுமந்தை தெருவைச்சேர்ந்தவர் மாயன் மகன் பிரபு 31.இவர் லோடுமேன் வேலை பார்த்து வந்தார் . இவர் நிறைய இடங்களில் கடன் வாங்கியுள்ளார்.அவற்றை திருப்பிச்செலுத்தமுடியவில்லை. கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி செய்தனர்.

இதனால், மனமுடைந்த பிரபு வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அவர் அம்மா ராஜாத்தி ஜெய்ஹிந்துபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவுசெய்து லோடுமேன் பிரபுவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.

நிதி நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை

பெத்தானியாபுரம் பாஸ்டின் நகர் அன்பு குறுக்குத்தெருவை சேர்ந்தவர் கார்த்திக்28.இவர் மனைவி பவித்திரா. இவர்களுக்கு 2016 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. ஒன்றரை வயதில் ஹர்சினி என்ற பெண் குழந்தை உள்ளது. இவர்கள் சொந்த ஊர் பெரியகுளம் வடகரை வைத்தியநாதபுரம் ஆகும்.

இவர்கள் கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்புதான் மதுரைக்கு குடிவந்தனர். கார்த்திக் அண்ணா மெயின் வீதியில் சங்கரேஸ்வரி பைனான்ஸில் கலெக்சன் வேலை பார்த்து வந்தார். இவர் பெரியகுளத்தில் சொந்த வீடு கட்டியுள்ளார். இதனால் பைனான்ஸ் உரிமையாளருக்கு கார்த்திக்கின் மீது சந்தேகம் ஏற்பட்டது.

சொந்தவீடுகட்ட எங்கிருந்து அவருக்கு பணம் வந்தது என்று கார்த்திக்கிடம் கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் மனவருத்தம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கார்த்திக் வேலையில் இருந்து நின்றுவிட்டார். இந்த நிலையில் பெத்தானியாபுரத்தை சேர்ந்த மாரிமறவன் என்பவர் அவர்களிடையே கட்டப்பஞ்சாயத்து செய்துள்ளார்.

இதைத்தொடர்ந்து கார்த்திக் மீண்டும் வேலைக்குச்சென்றுள்ளார். இந்த சூழ்நிலையில் கட்டப்பஞ்சாயத்து செய்துவைத்தற்கு பணம் கேட்டுள்ளார் மாரிமறவன்.அவரைத்தொடர்ந்து மேலும் சிலரும் அவரிடம் பணம் கேட்டுள்ளனர்.

இந்த நிலையில் மனைவி பவித்திரா தன் பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் கார்த்திக் துக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுவிட்டதாக மனைவி பவித்திராவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பவித்திரா பெத்தானியாபுரம் வந்தார். அவர் கணவரின் தற்கொலை குறித்து கரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பைனான்ஸ் ஊழியர் கார்த்திக்கின் தற்கொலை குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!