வாடிப்பட்டியில் அரிமா சங்க வட்டாரக் கூட்டம்..!

வாடிப்பட்டியில் அரிமா சங்க வட்டாரக் கூட்டம்..!
X

வாடிப்பட்டியில் அரிமா சங்க வட்டார கூட்டம்.

வாடிப்பட்டியில் அரிமா சங்க வட்டார கூட்டத்தில் சிறந்த சேவை ஆற்றியவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

வாடிப்பட்டியில் அரிமா சங்க வட்டார கூட்டத்தில் சிறந்த சேவை ஆற்றியவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

வாடிப்பட்டி :

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி நகர்,லயன்ஸ் சங்கம் மற்றும் மதுரை எக்கோ லயன்ஸ் சங்கம் சார்பாக ,மூன்றாவது வட்டாரக்கூட்டம் வாடிப்பட்டியில், நடந்தது. இந்த கூட்டத்திற்கு, வாடிப்பட்டி லயன்ஸ் சங்கத் தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.

மண்டலத்தலைவர் ஜெயச்சந்திரன், வட்டாரத் தலைவர் பாலாஜி,மாவட்ட நிர்வாகிகள் மணிகண்டன்,சிவக்குமார், மோகன்காந்தி, ரகுபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கப் பொருளாளர் கிருஷ்ண மூர்த்தி வரவேற்றார். இந்த கூட்டத்தில், அலங்காநல்லூர், நிலக்கோட்டை சங்ககளில் இந்த ஆண்டு சிறப்பாக சேவை செய்த 4 சங்கத் தலைவர், செயலாளர், பொருளாளர்களுக்கு, சிறந்த விருதும், ஜெ.சி.வட்டாரத் தலைவர் விருதுகளும் வழங்கப்பட்டது.

இந்த கூட்டத்தில், மாவட்டத் தலைவர்கள் குருசாமி , குணசேகரன், பாபு சரவணன், சிவசங்கர், உதவி தலைவர் பொன் கமலக்கண்ணன்,இளங்கோ,. டாக்டர் சர்க்கார்,சுந்தரேசன்,சங்கு பிள்ளை ,ராஜ பிரபு , டாக்டர் பொன் யாழினி மற்றும் அலங்காநல்லூர் லயன்ஸ் சங்கத் தலைவர் தயாளன், பொருளாளர் கண்ணன், மற்றும் நிலக்கோட்டை மலர் நகர் அரிமா சங்க நிர்வாகிகள் மதுரை எக்கோ லயன்ஸ் சங்க செயலாளர் ஜெயக்குமார் , மதுரை விக்டரி லயன்ஸ் சங்க தலைவர் தாஸ், திருமங்கலம் ஜெயம் லயன்ஸ் சங்கத் தலைவர் மூர்த்தி உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர், முடிவில் ,வட்டாரத் தலைவர் பாலாஜி நன்றி கூறினார்.

Tags

Next Story
why is ai important to the future