ஹரிஹரபுத்திர அய்யனார் கோயில் குதிரை எடுப்பு திருவிழாவில் பக்தர்கள் பரவசம்..!

ஹரிஹரபுத்திர அய்யனார் கோயில்  குதிரை எடுப்பு திருவிழாவில் பக்தர்கள் பரவசம்..!

ஹரிஹரபுத்திர அய்யனார் கோயில் குதிரை எடுப்பு திருவிழா.

சோழவந்தான் அருகே, திருவாலவாயநல்லூர் கிராமத்தில், ஹரிஹரபுத்திர அய்யனார் கோயில் குதிரை எடுப்பு திருவிழா நடந்தது.

சோழவந்தான் அருகே, திருவாலவாயநல்லூர் கிராமத்தில், ஹரிஹரபுத்திர அய்யனார் கோயில் குதிரை எடுப்பு திருவிழா நடந்தது.

சோழவந்தான்

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, திருவாலவாயநல்லூர் கிராமத்தில் அரிஹரபுத்திர அய்யனார் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா மூன்று நாட்கள் நடந்தது. இவ்விழாவை முன்னிட்டு கடந்த வாரம் முகூர்த்தக்கால் நடப்பட்டு அன்று முதல்பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வந்தனர். முதல் நாள் சப்பானி என்ற மங்கை கருப்பணசாமி கோயிலில் உலக நன்மைக்காக திருவிளக்கு பூஜை நடந்தது. இரண்டாம் நாள் காலை விநாயகர், சுந்தரவல்லி அம்மன், கானியாளன், சோனை ஆகிய கோவில்களில் மாவிளக்கு பூஜை நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து, மாலை 4 மணியளவில் குதிரை செய்யும் இடத்தில் இருந்து வானவேடிக்கை மேளதாளத்துடன் கிராம மக்கள் கருப்புசாமி மற்றும் இரண்டு குதிரைகள் எடுத்து வீதி உலா வந்தனர். இதைத் தொடர்ந்து, இங்குள்ள விவசாய குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் விவசாயம் செழிக்க கண்மாயில் விவசாயத்திற்கு தண்ணீர் நிரம்ப தங்கள் வயலில் விளைந்த நெல் கூடையில் சுமந்து வந்தனர்.

இங்குள்ள சப்பாணி என்ற மந்தை கருப்பணசாமி கோயிலில் கருப்புசாமி மற்றும் இரண்டு குதிரைகளை இறக்கி வைத்து பூஜைகள் நடத்தினர். இதைத் தொடர்ந்து, இங்கு உள்ள கண்மாயில் அரிஹர புத்திர அய்யனார் கோவிலுக்கு கருப்புசாமி குதிரைகள் எடுத்துச் சென்றனர்.இரவு கலை நிகழ்ச்சி நடந்தது.

மூன்றாம் நாள் மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை பெண்கள் முளைப்பாரி ஊர்வலமும் இரவு கலை நிகழ்ச்சியும் நடந்தது. சோழவந்தான் சப் இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர். விழா கமிட்டியினர் மற்றும் கிராம பொது மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

Tags

Next Story