மதுரை அருகே சிலம்பம் மூலம் கொரோனாவை கட்டுபடுத்த விழிப்புணர்வு

மதுரை அருகே சிலம்பம் மூலம்  கொரோனாவை கட்டுபடுத்த விழிப்புணர்வு
X
கொரோனா பரவலை கட்டுபடுத்தும் வகையில் கண்களை கட்டி சிலம்பம் சுற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது

கொரோனா பரவலை கட்டுபடுத்தும் வகையில் கண்களை கட்டி சிலம்பம் சுற்றி மாணவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

மதுரை எம்.கே.புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் தற்காப்பு கலையான சிலம்பத்தை ஊக்குவிக்கும் வகையிலும், கொரானா நோயை ஒழிக்க முகக் கவசம், சமூக இடைவெளி போன்ற அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க பொதுமக்களிடையே பல்வேறு வழிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஆர்.கே.சிலம்பம் தற்காப்பு கலை பயிற்சி மற்றும் சிலம்ப சாதனையாளர்கள் உலக சாதனை புத்தகம் சார்பாக இரண்டு மணிநேரம் கண்களை கட்டிக்கொண்டு சிலம்பம் சுற்றும் நிகழ்ச்சி சிலம்ப பயிற்சியாளரும் ஒருங்கிணைப்பாளருமான மாஸ்டர் ரமேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாணவ மாணவிகள் ஹரிணி மற்றும் நித்திலாஶ்ரீ.வெற்றி குமரன்.கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!