அலங்காநல்லூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் விழிப்புணர்வு பேரணி

அலங்காநல்லூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் விழிப்புணர்வு பேரணி

அலங்காநல்லூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி

அலங்காநல்லூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

காந்தி ஜெயந்தியையொட்டி, காங்கிரஸ் சார்பில், விழிப்புணர்வு பேரணி:

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில், இந்திய தேசிய காங்கிரஸ் வடக்கு மாவட்டம் சார்பில் தெற்கு வட்டாரத் தலைவர் சுப்பாராயலு ஏற்பாட்டில்,தேச தந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாள் விழா மற்றும் பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாளையொட்டி விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. கல்லணை, காந்திகிராமம் பஸ் நிலையம் முதல் கேட்டுக்கடை சந்திப்பு வரை காந்திய சிந்தனை, அமைதி, மத நல்லிணக்கம், அகிம்சை, வெறுப்பு அரசியலுக்கு எதிரான பிரச்சாரம் ஆகியவற்றை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இதற்கு,மாவட்டத் தலைவர் ஆலாத்தூர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்பாளர் முன்னாள் சட்டமன்ற குழு தலைவர் ராமசாமி பேரணியை துவக்கி வைத்தார்.

பொதுக்குழு உறுப்பினர்கள் ஜெயமணி, நூர் முகமது, காரணம், திலகராஜ், முருகன், காங்கிரஸ்மூத்த தலைவர் தனுஷ்கோடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகளிரணி மாவட்டத் தலைவி செல்லப்பா சரவணன், அமைப்பு சாரா தொழிலாளர் காங்கிரஸ் மாவட்ட த்தலைவர் சோணைமுத்து, மனித உரிமை மாவட்ட தலைவர் முத்து ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

வட்டாரத் தலைவர்கள் சீனிவாசன், சிவராமன், சந்தானம், சுப்பராயலு, காந்திஜி, குருநாதன், பழனிவேல், சோழவந்தான் நகர் தலைவர் முத்துப்பாண்டி, முன்னாள் வட்டாரத் தலைவர் மலைக்கனி, பாலமுருகன், கார்த்திக், செய்யது, திரவியம், முத்தன், மலைராஜன், கண்ணுச்சாமி, தர்மர், மகேஷ் திருப்பதி, பாலமேடு சந்திரசேகர், இளைஞர் காங்கிரஸ் தொகுதி துணைத் தலைவர் இளவரசன், வரிசை முகமது, சாமிநாதன், மேலசின்னம்பட்டி ராமச்சந்திரன், பாலமுருகன், செல்லதுரை, சுகுமாரன், மூத்த காங்கிரஸ் தலைவர் செல்வராஜ், பாலுச்சாமி, கார்த்திக், நாகமலை, மணியஞ்சி பாஸ்கர சேதுபதி, நேதாஜி நகர் கார்த்திகா, ராஜேந்திரன், வாவிடமருதூர் மலைச்சாமி, தேவராஜன் உள்ளிட்ட சுமார் 250க்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, காந்தியடிகள் உருவப்படத்திற்கு, மாலை அணிவித்து தீண்டாமை ஒழிப்பு, வன்முறை தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். முடிவில், அமைப்புசாரா தொழிலாளர் காங்கிரஸ் வட்டாரத் தலைவர் முத்து நன்றி கூறினார். முன்னதாக , இப்பேரணியில் கருப்பட்டி முருகன், மற்றும் செல்வி சாய்நிலாவும் காந்தி வேடம் அணிந்து பேரணியில், கலந்து கொண்டனர்.

Next Story