கள்ளர்நாடு அறக்கட்டளை சார்பில் விருது வழங்கும் விழா
மதுரையில் நடைபெற்ற கள்ளர் நாடு அறக்கட்டளையின் சார்பில் விருதுகள் வழங்கும் விழா.
கள்ளர்நாடு அறக்கட்டளை சார்பாக அரசு கள்ளர் பள்ளி மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.
மதுரை ஆரப்பாளையம் சிவபாக்கியா மகாலில் நடைபெற்ற விழாவை மூத்த தி.மு.க நிர்வாகி பொன். முத்துராமலிங்கம், தொழிலதிபர் சோலை ரவி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடக்கி வைத்தனர்.
விழாவில் பங்கேற்றஸ மதுரை, தேனி, திண்டுக்கல் பகுதிகளில் உள்ள அரசு கள்ளர் உயர்நிலை பள்ளிகள் மற்றும் மேல்நிலைபள்ளிகளில் பத்தாம் மற்றும் பண்ணிரென்டாம் வகுப்பில் 100% தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், அரசு கள்ளர் பள்ளிகளுக்கும் விருது வழங்கி வாழ்த்தினர்.
விழா ஏற்பாடுகளை, கள்ளர்நாடு அறக்கட்டளை நிறுவனத்தலைவர் வல்லாளதேவன், செயலாளர் பிரேம்குமார் ஆகியோர் செய்திருந்தனர். இதில் கள்ளர்நாடு நிர்வாகிகள் மற்றம் மாணவ மாணவிகள் 1000 பேர் 33 பள்ளிகளில் இருந்து கலந்து கொண்டனர்.
கள்ளர் வாழ்வியல் வரவாறு: கள்ளர் சிற்றரசர்களாயிருந்த காலத்தில் பல விடங்களில் அரண் (கோட்டை) கள் கட்டியிருந்தனர். தஞ்சை மாநகரைச் சோழ மன்னர்கள் தலை நகராகக் கொள்வதற்கு முன்னே வல்லம் என்னும் கோட்டை, கள்ளரில் ஒரு வகுப்பாருடைய தலை நகரமாகச் சிறந்திருந்தது. தொண்டைமான் மன்னர்களால் புதிய கோட்டை கட்டி அதற்க்கு புதுக்கோட்டை என்று பெயர் வைத்தார்கள். அதை போல் கள்ளர்களால் பாண்டிய மண்டலத்தில் தன்னரசாக ஆட்சி செய்யப்பட்ட ஒரு பகுதி மயில்ராயன்கோட்டை நாடு என்றும் மல்லாக்கோட்டை நாடு என்றும் அழைக்கப்படுகிறது.
இங்கே கள்ளர்கள் 1000 வருடங்களுக்கு முன் காஞ்சிபுரம் (மல்லை) பகுதியில் இருந்து கூட்டமாக வந்தார்கள் என்றும், சிலர் புதுக்கோட்டைச் சீமையில் அமைந்த வள்ளநாடு என்ற பகுதியில் இருந்து கூட்டமாக வந்தார்கள் என்றும், அந்தக் கூட்டத்தை தலைமை தாங்கியவர்கள் நரசிங்கத்தேவர், வள்ளாளத்தேவர், சீவிலித்தேவர், மன்னத்தேவர், பொன்னத்தேவர் என்றும் கூறுகின்றனர்.நரசிங்கத்தேவர், வள்ளாளத்தேவர், சீவிலித்தேவர் வாரிசுகள் மல்லாக்கோட்டையில் இன்றும் உள்ளனர்.
இந்நாட்டின் உட்பிரிவுகள்கட்டாணிப்பட்டி, மாம்பட்டி,மல்லாக்கோட்டை,நாமனூர்,ஏரியூர்,அழகமாநகரி, ஜெயங் கொண்டான்நிலை, வடவன்பட்டி,வடக்குவட்டம்-எஸ்எஸ்கோட்டை,தெற்குவட்டம்-அவலாக்கோட்டைஉட்பட இந்நாட்டில் 60க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இது இன்றும் கள்ளர் குடியின் அம்பலக்காரர்களினால் ஆட்சி செய்யப்படுகிறது.இந்நாட்டில் இருந்து கிழக்கு பக்கம் பிரிந்த நாடு நாலூர் நாடு (தமராக்கி), அஞ்சூர் நாடு (ஏனாதி). மேற்கு பக்கம் பிரிந்த நாடு பிறமலை நாடு (புத்தூர் நாடு), பிறமலை நாடு (கொக்குளம் நாடு)
பாண்டிய மன்னர்களின் ஆட்சிக்குட்பட்ட இப்பகுதியை, 11ம் நூற்றாண்டில் சோழ மன்னன் முதலாம் ராஜேந்திரன் கைப்பற்றினார். அதன்பின், 12ம் நூற்றாண்டில் பாண்டியர் வம்சத்தில் வந்த ஜடாவர்ம குலசேகரன், சோழ மன்னனை வென்று நாட்டை மீட்டார். சிவபக்தனான ஜடாவர்ம குலசேகரன், தான் வெற்றி பெற்றமைக்கு நன்றிக் காணிக்கையாக, நாமனூரை மையமாக வைத்து வடக்கு வட்டம் தெற்குவட்டம் என பிரிக்கப்பட்டிருந்த வடக்கு வட்டத்தில் அடங்கிருந்த திருமலை கிராமம் மலையில் சிவனுக்கு கோயில் எழுப்பி,” மலைக்கொழுந்தீஸ்வரர்” என்று பெயர் சூட்டினான். மிகவும் தொன்மையான இக்கோயிலில் கி.பி.2ம் நூற்றாண்டுகளில் வழக்கில் இருந்த தமிழ் பிராமிக் கல்வெட்டுக்கள் உள்ளன. முன்மண்டபத்தில் கம்பீரமாக திருமலை பகுதிக்கு திசைக் காவல் பொறுப்பிற்கு நியமிக்கப்பட்ட கள்ளர் குடியில் பிறந்த காவல் தெய்வம் மாவீரர் கருவபாண்டியர் சிலை உள்ளது.
சிவகங்கை சரித்திர கும்மி இந்தப்பகுதியை பற்றிபாடுகிறது.."பெருமை மிகத்தவறாப் பெரும்மாலைய நாடும் ராசவள நாடும் நல்லசிறு பூங்குடியும் மாசில்லாக் கள்ளர் மல்லாக்கோட்டை நாட்டவரும்" என மருதுபாண்டியருக்கு படை உதவி அளித்த கள்ளர் நாடுகளில் மல்லாக்கோட்டை நாட்டவரையும்"(18 ஆம் நூற்றாண்டு ஓலைச்சுவடிகள்- மருதுபாண்டிய மன்னர்கள் - மீ மனோகரன் பக்-305)
இங்கே கள்ளர்கள் பெரும்பாலும் அம்பலம் என்ற பட்டத்தினையே பயன்படுத்துகிறார்கள். இவர்களில் சிலர் சிவகங்கை அரசர்களிடமும் படைத்தளபதிகளாகவும், படை வீரர்களாகவும் இருந்தனர். வடக்கு வட்டத்தினை சேர்ந்தவர்களும், மல்லாக்கோட்டை பெரிய அம்பலக்காரர் வம்சத்தவரும் " சேர்வை " என்ற பட்டத்தை சூடிக்கொள்கின்றனர். இதில் சிலர் தேவர் என்ற பட்டத்தையும் பயன்படுத்துகின்றனர்.இவர்கள் மத்தியில் கைம்பெண்மனமும், மணவிலக்கும் அனுமதிக் கப்படுகிறது.
மயில்ராயன்கோட்டை நாட்டின் மட்சிமை பொருந்திய அம்பலக்காரர்களின் பெயர்கள் மற்றும் வகையறா. தலைக் கிராமம் கட்டாணிபட்டி பெரியம்பலகாரர்கள் வகையறா (சிவகங்கை சமஸ்தானம் இவர்களுக்கு கருப்புக்குடை, தலைப்பகையும் பரிவட்டமாகத்தந்து மரியாதையை செய்தது) என்பது வரலாற்றுப்பதிவாக உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu