ஆடி வெள்ளிக்கிழமை; ஆலயங்களில் சிறப்பு வழிபாடு

ஆடி வெள்ளிக்கிழமை; ஆலயங்களில் சிறப்பு வழிபாடு
X

மதுரை திடீர் நகர் சந்தன மாரியம்மன் ஆலய  விழாவில், பால்குடம் எடுத்த பக்தர்கள்.

ஆடி வெள்ளிக்கிழமையான இன்று மதுரையில் பால்குடம் எடுத்துவந்த பெண் பக்தர்கள், அம்மனை வழிபட்டனர்.

மதுரை திடீர் நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ சந்தன மாரியம்மன் திருக்கோயிலில், 68 ஆம் ஆண்டு உற்சாக விழாவை முன்னிட்டு, பால்குடம் எடுத்து, அலகு குத்தி நேர்த்திக்கடனை பொதுமக்கள் செலுத்தினர்.

இக்கோயிலில் ஆடித் திருவிழா நடந்த வருகிறது. விழாவையொட்டி, சந்தன மாரியம்மனுக்கு, கோயில் விழாக் குழுவின் சார்பில், பால், இளநீர், சந்தனம் போன்ற அபிஷேக திரவியங்களால்,சிறப்பு அபிஷேகமும், அதைத். தொடர்ந்து அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

மதுரை மேலமடை சௌபாக்கிய விநாயகர் ஆலயத்தில், ஆடி வெள்ளிக்கிழமையை, முன்னிட்டு, இக்கோயிலில் அமைந்துள்ள வராஹியம்மன், துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும், பூஜைகள் நடைபெற்றது.

மதுரை அண்ணாநகர் யானைக்குழாய் முத்துமாரியம்மன், வைகை காலனியில் உள்ள வைகை விநாயகர் ஆலயத்தில், துர்க்கை அம்மனுக்கும், திருமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் துர்க்கை அம்மனுக்கு, பக்தர்கள் சார்பில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!