அட்சய திரிதியை: வாடிக்கையாளர்களுக்கு பகவத்கீதை புத்தகம் வழங்கிய நிர்வாகம்

அட்சய திரிதியை: வாடிக்கையாளர்களுக்கு பகவத்கீதை புத்தகம் வழங்கிய நிர்வாகம்
X

மதுரையில் உள்ள நகைக்கடையில் அட்சய திருதியையொட்டி  வாடிக்கையாளர்களுக்கு பகவத்கீதை புத்தகம் வழங்கினர்

பகவத் கீதை புத்தகம் வழங்கியது எங்களுக்கு மிகுந்த மனநிறைவைத் தருவதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர்

அட்சய திருதியை முன்னிட்டு நகைக் கடைகளில் குவிந்த வாடிக்கையாளர்களுக்கு கடை நிர்வாகிகள் பகவத் கீதை புத்தகம் வழங்கி வியப்பில் ஆழ்த்தினர்.

அட்சய திருதியை முன்னிட்டு நகை கடைகளில் மக்கள் இன்று காலை முதல் குடும்பத்தினருடன் சென்று தங்களுக்கு பிடித்த டிசைன்களில் நகைகளை தேர்வு செய்து எடுத்து வருகின்றனர். அந்த வகையில், மதுரை காளவாசலில் உள்ள தங்கமயில் நகைக்கடையில் நகைகளை தேர்வு செய்ய வந்த வாடிக்கையாளர்களுக்கு கடைநிர்வாகிகள் பகவத் கீதை புத்தகம் வழங்கியது வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்தது.

இதுகுறித்து வாடிக்கையாளர்கள் கூறும்போது : அட்சய திரிதியை அன்று, நகைகளை வாங்குவது மங்களகரமாக இருக்கும் என்பது காலம் தொட்டு இருக்கும் நம்பிக்கை இந்த வகையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா நோய் தொற்று காரணமாக அட்சய திரிதியை அன்று நகைகளை வாங்க முடியாமல் இருந்தோம் .இந்த ஆண்டு அட்சய திருதியை அன்று நகைகளை வாங்குவதற்காக வந்திருந்தோம் நகைகளை வாங்கிச் செல்லும்போது கடை உரிமையாளர்கள் பகவத் கீதை புத்தகம் வழங்கியது எங்களுக்கு மிகுந்த மனநிறைவைத் தருவதாக தெரிவித்தனர்.

Tags

Next Story