மதுரை அட்சய பாத்திரம் அமைப்பின் சார்பில் உணவு வழங்கும் நிகழ்ச்சி

மதுரை அட்சய பாத்திரம் அமைப்பின் சார்பில் உணவு வழங்கும் நிகழ்ச்சி
X

மதுரையில் அட்சய பாத்திரம் அமைப்பின் சார்பில் சாலையோர ஏழைகளுக்கு உணவினை முன்னாள் அமைச்சர் உதயகுமார் வழங்கினார்.

மதுரை அட்சய பாத்திரம் அமைப்பின் சார்பில் உணவு வழங்கும் நிகழ்ச்சியை முன்னாள் அமைச்சர் உதயகுமார் தொடங்கி வைத்தார்.

கொரோனா பரவலை தொடர்ந்து, ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காலத்தில், மதுரை மாநாகரில் சாலை ஓரங்களில் வசித்தவர்கள் பலர் உணவு இன்றி சிரமம் அடைந்தனர்.

அவர்களுக்கு, உணவு அளிக்கும் வகையில், மதுரையின்அட்சய பாத்திரம் டிரஸ்ட் தொடங்கப் பெற்று ரோட்டோரத்தில் உள்ள வறியவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கும் திட்டம், தொடங்கப் பெற்று மதுரை அரசு மருத்துவமனை, அண்ணா பேருந்து நிலையம் ,பெரியார், ஆரப்பாளையம், ரயில் நிலையம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ளவர்களுக்கு மதிய உணவு தினமும் வழங்கப்பட்டு வருகிறது.

நேற்றுடன் 256 நாள் நிறைவடைந்தது.பொங்கல் திருநாளை முன்னிட்டு, மதுரையின் பல்வேறு பகுதிகள் மற்றும் மதுரை அரசு பொது மருத்துவமனை தலை காயம் விபத்து பகுதியில் உள்ள பார்வையாளர்களுக்கு இன்று 600 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

விழாவை, குன்னத்தூரில், தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தொடங்கி வைத்தார்.

உணவு கொடுத்துக் கொண்டு வரும் வழியில் இரண்டு பூம் பூம் மாடுகள் தலையசைத்து வாழ்த்து தெரிவித்தது. மதுரை தெப்பக்குளம் அருகிலுள்ள பகுதியில் உள்ள உடலில் சாட்டை எடுத்து வருத்திக்கொண்டு வாழ்க்கையை ஓட்டி வரும் வறியவர்கள் மற்றும் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் மதுரை அரசு பொது மருத்துவமனை தலை காயம் விபத்து பகுதியில் உள்ள பார்வையாளர்கள் உட்பட 600 பேருக்கு இன்று உணவு வழங்கப்பட்டது.

இதில், மதுரை கிழக்கு ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் பிரபு கார்த்திகேயன், மதுரை ராயல் ரோட்டரி சங்கத்தை சேர்ந்த ஜெயக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

உணவு வழங்கும் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை, மதுரையின் அட்சயபாத்திரம் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்.

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை அன்றும் முழு அடைப்பு என அரசு அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமை அன்றும் மதுரையில் ரோட்டோரத்தில் உள்ள வறியவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வெளிநோயாளிகள் பகுதியில் இருப்பவர்கள் உட்பட 800 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

Tags

Next Story