மதுரை மாவட்ட கோயில்களில் நாளை ஆருத்ரா தரிசனம்

மதுரை மாவட்ட கோயில்களில் நாளை ஆருத்ரா தரிசனம்
X

பைல் படம்

மார்கழி மாத திருவாதிரை நாளில் நடராஜர், சிவபெருமான், சிவகாமி அம்மன், மாணிக்க வாசகருக்கு சிறப்பு வழிபாடு நடைபெறும்

மதுரை கோயில்களில் டிச. 20-ல் ஆருத்ரா தரிசனத்தையொட்டி நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.

மதுரை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் டிச. 20-ம் தேதி திங்கள்கிழமை அதிகாலை நடராஜர் அபிஷேகமும், ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது.

ஆண்டுதோறும் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று, சிவ ஆலயங்களில், நடராஜர் மற்றும் சிவபெருமான், சிவகாமி அம்மன் மற்றும் மாணிக்க வாசகருக்கு பக்தர்களால், சிறப்பு அபிஷேகமும், அதைத் தொடர்ந்து, சிறப்பு அர்ச்சனைகளும் நடைபெறுகிறது. மதுரையில் மூக்தீஸ்வரன், மதுரை செல்லூர் திருவாப்புடையார், இம்மையில் நன்மை தருவார்,மதுரை மேலமடை தாசில்தார் சௌபாக்யா விநாயகர், அண்ணாநகர் சர்வேஸ்வரன், திருவேடகம் ஏடகநாதர், தென்கரை மூலநாதர், சோழவந்தான் பிரளயநாதர் கோயில்களில் திருவாதிரையையொட்டி, நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.

Tags

Next Story