சோழவந்தான் அருகே திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் கலைக்கூடல் நிகழ்ச்சி

சோழவந்தான் அருகே திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் கலைக்கூடல் நிகழ்ச்சி
திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் நடைபெற்ற கலைக்கூடல் கலை நிகழ்ச்சி.
சோழவந்தான் அருகே திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் கலைக்கூடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் மாணவர்களின் கலைக்கூடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே, திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், விவேகா நுண்கலை மன்றம் சார்பில், மாணவர்களின் கலைக்கூடல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. விவேகா நுண்கலை மன்ற ஒருங்கிணைப்பாளர் முனைவர் அருள்மாறன் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் வெங்கடேசன் தலைமையுரை ஆற்றினார். செயலாளர் சுவாமி வேதானந்த குலபதி சுவாமி அத்யாத்மனந்த மற்றும் அகத்தர உறுதி மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் சதீஷ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக முன்னாள் மாணவர் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் கலந்து கொண்டு போட்டிகளில் பங்குபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

மாணவர்கள் கலைக்கூடல் நிகழ்ச்சியில், மௌன மொழி நாடகம், நாட்டுப்புறப் பாடல், நகைச்சுவை நாடகம், தேசபக்தி பாடல், மெல்லிசை பாடல், பறையாட்டம் ஆகிய கலை நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்தினர். வேதியியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் எல்லைராஜா நன்றி உரையாற்றினார். கணினி துறை உதவி பேராசிரியர் கோபிநாத் மாணவர்களின் கலைத்திறமையை முன் நின்று ஒருங்கிணைத்தார்.

விவேகானந்த குருகுல கல்லூரியின் ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் சந்திரசேகரன், இரகு, முனைவர் காமாட்சி, முனைவர் பிரேமானந்தம் நிகழ்ச்சி ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டனர். மூன்றாம் ஆண்டு வேதியியல் துறை மாணவர் திலகேசன் நிகழ்ச்சியை இனிதே தொகுத்து வழங்கினார்.

Tags

Next Story