மதுரையில் அர்ஜுன் சம்பத் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு

மதுரையில் அர்ஜுன் சம்பத் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு
X

மதுரையில் அர்ஜூன் சம்பத் கைது.

மதுரையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கும்போது விசிகவினரிடம் ஏற்பட்ட தகராறில் கைது செய்யப்பட்டார்

மதுரை தல்லாகுளம் பகதியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரையில் , அம்பேத்கரின் 67-வது நினைவு நாளையொட்டி, அவுட் போஸ்ட் பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கரின் சிலைக்கு விடுதலைச் சிறுத்தைகள் மே 17 இயக்கம் புரட்சி பாரதம் கட்சியினர் என்பன உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ,இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், தனது ஆதரவாளர்களுடன் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற போது, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர் பிரிவினருக்கும் அர்ஜுன் சம்பத் ஆதரவாளர் களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, இந்து மக்கள் கட்சித்தலைவர் அர்ஜுன் சம்பத் கைது செய்யப்பட்டார். இதனால், அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

Tags

Next Story
ai robotics and the future of jobs