சோழவந்தான் அருகே முள்ளிப்பாலத்தில் தனியார் பள்ளி ஆண்டு விழா..!

சோழவந்தான் அருகே முள்ளிப்பாலத்தில் தனியார் பள்ளி ஆண்டு விழா..!
X

முள்ளிப் பள்ளத்தில், தனியார் பள்ளி ஆண்டு விழா.

சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் தனியார் பள்ளியில் விளையாட்டு மற்றும் ஆண்டு விழா நடந்தது.

சோழவந்தான், பிப்.19.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், சோழவந்தான் அருகே, முள்ளிபள்ளம் பவர் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி விளையாட்டு தின விழா மற்றும் ஆண்டு விழா நடந்தது. காலையில் நடந்த விளையாட்டு தின விழாவில், மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட விளையாட்டு நிகழ்ச்சி நடந்தது. மாணவ மாணவிகள் ஒலிம்பிக் சுடர் ஏற்றி பள்ளி வளாகத்தில் கொடியேற்றினர். மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு நிகழ்ச்சி, பெற்றோருக்கான விளையாட்டு நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில், ஆசிரியை சொர்ணலட்சுமி வரவேற்றார். முன்னாள் ராணுவ வீரர் சரவணன், முன்னாள் முதல்வர் அங்கயர்கன்னி,விவசாய கல்லூரி முத்துராமலிங்கம் ஆகியோர் பரிசு வழங்கினர். ஆசிரியை மனோகரம் நன்றி கூறினார்.

மாலையில் நடந்த ஆண்டு விழாவில், சோழவந்தான் பேரூராட்சித் தலைவர் எஸ். எஸ் .கே. ஜெயராமன் தலைமை தாங்கினார். பவர் பள்ளியின் முதல்வர் ரஜினிகாந்த் முன்னிலை வகித்தார்.

உதவி முதல்வர் ஜெனகைமாரி வரவேற்றார். பட்டிமன்ற பேச்சாளர் எழிலரசி வாழ்த்துரை வழங்கினார். விருதுநகர் ஸ்கூல் முதல்வர் சங்கர், வழக்கறிஞர் கணேசன் ஆகியோர் பரிசு வழங்கினார்கள். ஆசிரியை முர்ஜிதாசிரின் ஆண்டறிக்கை வாசித்தார். பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி நன்றி கூறினார். ஆண்டு விழாவில், எல்கேஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவிகள் கராத்தே உள்பட தமிழ் வீர விளையாட்டுகள் செய்து காண்பித்தனர். இதைத்

தொடர்ந்து, பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. காடுபட்டி போலீசார் பாதுகாப்பு பணியை செய்திருந்தனர்.

Tags

Next Story
ai solutions for small business