விநாயகர் சிலை கண்மாயில் வீசியதால் ஆத்திரம்: சொந்த செலவில் வாங்கிக்கொடுத்த போலீசார்
மதுரை மாவட்டம், திருமங்கலம் நகரில் உள்ள செங்குளம் பகுதியில், இரவு நாலரை அடி உயரம் உள்ள விநாயகர் சிலை, அக்கிராமத்தில் உள்ள பெருமாள் கோவிலினுள் வைக்கப்பட்டிருந்ததை வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினர் இரவோடு இரவாக அருகில் உள்ள கண்மாய் நீரில் கரைக்க வீசியுள்ளனர்.
ஆத்திரமடைந்த மதுரை மாவட்ட தலைவர் அழகர்சாமி உள்ளிட்ட இந்து முன்னணியினர், திருமங்கலம் நகர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு கண்மாய் நீரில் கரைத்த விநாயகர் சிலையை ஒப்படைக்கக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசு விதிமுறையை மீறி வைத்த விநாயகர் சிலையை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. ஆனால், காவல்துறை, வருவாய் துறையினரும், பொது கோவிலில் வைக்கப்பட்ட விநாயகர் சிலையை அகற்றி, கண்மாய் நீரில் தூக்கி வீசியுள்ளனர். எனவே இதனை கண்டித்து, இந்து முன்னணியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், வேறுவழியின்றி காவல்துறை மற்றும் வருவாய் துறையினர் புதிதாக சிலையை விலைக்கு வாங்கி அவர்களிடம் ஒப்படைத்தனர்.
அதனைத் தொடர்ந்து, புதிய சிலையை பெற்ற இந்து முன்னணியினர் செங்குளத்தில் பொது கோவிலில் வைத்து பூஜிக்கப்பட்டு வருகின்றனர்.
அரசு அதிகாரிகளே விநாயகர் சிலையை விலைக்கு வாங்கி இந்து முன்னணியினரிடம் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu