மதுரையில் துப்பாக்கி சுத்தம் செய்யும்போது வெடித்து முன்னாள் ராணுவ வீரர் உயிரிழப்பு
முன்னாள் ராணுவ வீரர் ராஜேந்திரன் (கோப்பு படம்)
முன்னாள் ராணுவ வீரர் துப்பாக்கி சுத்தப்படுத்தும் போது எதிர்பாராத விதமாக பட்டு வெடித்ததில் உயிரிழந்தார்.
மதுரை பெத்தானியாபுரம் தாமஸ் விதியை சேர்ந்த ராஜேந்திரன். முன்னாள் ராணுவ வீரர் 23 வருடமாக ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்று, தற்போது தனியார் வங்கியில் பாதுகாவலராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், தனியார் வங்கியில் 20 நாட்களாக வேலைக்கு செல்லவில்லை. இதனால், துப்பாக்கியை காவல் நிலையத்தில் ஒப்படைப்பதற்காக இன்று காலை தனது வீட்டு மொட்டை மாடியில் துப்பாக்கியை சுத்தம் செய்யும் பொழுது, தவறுதலாக கைப்பற்று வயிற்று பகுதியில் சுட்டுக் கொண்டார் .
இதை அறிந்த, குடும்பத்தினர் ரத்த வெள்ளத்தில் துடித்த அவரை மீட்டு, ஆட்டாவில் ஏற்றி அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். கொண்டு செல்லும் வழியில் உயிர் இழந்தார் .
கரிமேடு காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து அவர்களது குடும்பத்தாரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
மேலும் ,எதிர்பாராத விதமாக துப்பாக்கி வெடித்ததா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து கரிமேடு போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். இதனால், அப்பபகுதியில் பரபரப்பு ஏற்பட்டது..
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu