சோழவந்தானில் அதிமுகவின் 53ம் ஆண்டு துவக்க விழா இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
சோழவந்தானில் அதிமுக சார்பில் 53 ஆண்டு துவக்க விழா கொண்டாடப்பட்டது.
சோழவந்தானில் அதிமுக 53 வது ஆண்டு துவக்க விழாவை அதிமுகவினர் இனிப்பு கொடுத்து கொண்டாடினர்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் கடைவீதியில் அதிமுக தெற்கு ஒன்றியம் சோழவந்தான் நகர கழகம் சார்பாக அதிமுக 53வது ஆண்டு துவக்க விழா கொண்டாடப்பட்டது. 1972 ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் நாள் அதிமுக கட்சியின் நிறுவனர், முன்னாள் முதலமைச்சர், எம்ஜிஆரால் அதிமுக தொடங்கப்பட்டது.
அதிமுக தொடக்க நாளை முன்னிட்டு சோழவந்தான் கடைவீதியில் அதிமுக தெற்கு ஒன்றியம் மற்றும் நகரக் கழகத்தின் சார்பாக விழா நடந்தது. இவ்விழாவிற்கு முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் எம்.கே. முருகேசன் தலைமை தாங்கினார். வாடிப்பட்டி யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ்கண்ணா, நகரச்செயலாளர் முருகேசன், மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் கொரியர் கணேசன், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி பொதுமக்களுக்கு லட்டு வழங்கினார். இதில் கவுன்சிலர் ரேகாராமச்சந்திரன், டீகடைகணேசன் மாவட்டபிரதிநிதி ஜெயபிரகாஷ், நகர துணைச்செயலாளர் தியாகு, பேச்சாளர் வெடிகுண்டு ராசு, ஹரீம்,கனகசுந்தரம், சேதுகண்ணன், பூக்கடை அழகர், காமாட்சி,மகளிர் அணி மரகதம், மாவட்ட இளைஞரணி இணை செயலாளர் கேபிள் மணி உட்பட அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர். இறுதியில் மகளிர் அணி சாந்தி நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu