தேனியில் அதிமுக வெற்றி பிரகாசமாக உள்ளது : முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்..!

தேனியில் அதிமுக வெற்றி பிரகாசமாக உள்ளது : முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்..!
X

தேனி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் நாராயணசாமி ஆதரித்து, முன்னாள் அமைச்சர் பிரசாரம்.

விரலை வெட்டினால் கூட மக்கள் வேறு சின்னத்திற்கு ஓட்டு போடமாட்டார்கள் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

விரலை துண்டாக வெட்டினாலும் ,மக்கள் வேறு சின்னத்திற்கு ஓட்டு போட மாட்டார்கள் - இரட்டை இலைக்குத் தான் ஓட்டு போடுவார்கள் - தேனியில் வெற்றி முகம் பிரகாசமாக உள்ளது - என உசிலம்பட்டியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேட்டி அளித்தார்.

மதுரை:

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில், அதிமுக வேட்பாளர் வி.டி.நாராயணசாமி, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் உள்ளிட்டோர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்,

அதிமுக வேட்பாளர் நாராயணசாமியை எதிர்த்து நிற்பவர்களும் இரட்டை இலையை அடையாளமாக பெற்ற அந்த சின்னம், எங்களுக்கு களம் பிரகாசமாக உள்ளது., எங்களுக்கு வெற்றி வாய்ப்பு உறுதி எத்தனை வாக்கு வித்தியாசம் என்பதை தான் நாங்கள் பார்க்க வேண்டும்.

எங்களை எதிர்த்து நிற்பவர்களுக்கு பயம் வந்துவிட்டது., வேட்புமனு தாக்கல் செய்யும் போது மக்களுக்கு வரவேற்பு கூட இல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கேட் -யை உடைத்துக் கொண்டு உள்ளே செல்கின்றனர்.ஓட்டு கேட்கும் போதே கேட்-யை உடைத்து கொண்டு உள்ளே செல்பவர்கள் ஓட்டு வாங்கிய பின் எந்த கேட்-யை உடைப்பார்கள் என மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இன்னொரு வேட்பாளர் வேட்புமனுவை வீட்டில் வைத்துவிட்டு வந்துவிட்டாராம், இரட்டை இலையில் வெற்றி பெற்றவர், இரட்டை இலையில் மாவட்ட செயலாளராக இருந்தவர், இரட்டை இலையில் தான் இந்த பகுதிக்கு அறிமுகம் ஆனவர் இப்போது தீடீரென போக வேண்டும் என்றால் வேட்புமனு பேப்பர் கூட அவர் கூட வர மறுக்கிறது.

இரண்டு வேட்பாளர்களும் எங்க இருக்காங்க என தேடும் நிலையே உள்ளது., தினசரி ஆரவாரத்துடன் வாக்கு சேகரித்து வருகிறோம். வேட்பாளர் செல்வதை போல எத்தனை ஆயிரம் ரூபாய்க்கு ஓட்டுக்கு விலை பேசினாலும், விரலை துண்டாக வெட்டினாலும், வேறு சின்னத்திற்கு போட மாட்டார்கள் இந்த மக்கள் இரட்டை இலைக்கு தான் போடுவார்கள்.

அம்மா உயிரை கொடுத்து உருவாக்கிய அரசின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கோரிய போது இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து ஓட்டு போட்டவர் ஓபிஎஸ். இருந்த போதும் எங்களிடம் சரணாகதி அடைந்த போதும் மிக உயர்ந்த பொறுப்பை கொடுத்து, ஒருங்கிணைப்பாளர், துணை முதல்வர் என பதவியை கொடுத்தார் எடப்பாடி பழனிசாமி.

2021 ஆம் ஆண்டு முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அவர் தான் முன்மொழிகிறார். ஆனால் அதற்குரிய பணிகள் செய்யாமல் துரோகம் செய்ததால் பொதுக்குழுவில் முடிவெடுத்து, தீர்மானம் நிறைவேற்றி இரண்டு கோடி தொண்டர்களும் கட்சியிலிருந்து நீக்கிவிட்டனர்.

இப்போது அவர் வந்து இரட்டை இலையை எதிர்த்து நிற்ப்பதை எந்த வகையில் நியாயம் என ஏற்றுக் கொள்வது. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம்., இவர்களுக்கு தோல்வி பயம் வந்ததால் அதை குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்., அவர் நாடகத்தை அரங்கேற்றி வருவதை மக்களும், தொண்டர்களும் நம்ப தயாராக இல்லை.

ஓபிஎஸ் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்ய வைத்ததில் உங்களுக்கு தொடர்பு உள்ளதா என்ற கேள்விக்கு, நீங்களும் நானும் நண்பராக இருப்பதில் தவறு இல்லை, மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து அனைத்து வேட்புமனுவும் ஏற்கப்பட்டுள்ளது பேசினார்.

தொடர்ந்து பேசிய அதிமுக வேட்பாளர் நாராயணசாமி,

தேர்தல் வாக்குறுதியில் தேனி மக்களுக்கு தேவையான வாக்குறுதிகளை முன்னுரிமை எடுத்து நிறைவேற்றுவேன். நாங்கள் ஆழமரம், அவர்கள் ஆழமரத்தில் உள்ள கிளைகள்., கிளைகள் எப்போது வேண்டுமானாலும் உதிரும் எங்கு பசுமையாக உள்ளதோ அதை தேடி ஓடுபவர்கள் நாங்கள் ஆணி வேர் போன்றவர்கள் 40 ஆண்டுகளாக இதில் தான் உள்ளேன்.

மக்களை பொருத்தமட்டில் தங்கதமிழ்ச் செல்வனை பார்க்கும் போதும், டிடிவி தினகரனை பார்க்கும் போதும் இரட்டை இலைக்கு ஓட்டுக் கேட்டு வந்துள்ளார் என தான் நினைப்பார்கள்., அவர்கள் நினைப்பது ஒரு புறம் என்றாலும் மக்களின் மனநிலை இரட்டை இலையாக தான் இருக்கும், 60% வாக்காளர்கள் கை இரட்டை இலைக்கு தான் போதும், ஓட்டுக்கு 5 ஆயிரம் கொடுத்தாலும் இரட்டை இலையை தாண்டி மக்களின் கை வேறு எதர்க்கும் போகாது என பேசினார்.

இதில், உசிலம்பட்டி முன்னாள் எம்எல்ஏக்கள் ஐ.மகேந்திரன், பா.நீதிபதி, ஆண்டிபட்டி முன்னாள் எம்எல்ஏ தவசி, அகில இந்திய பார்வர்ட் ப்ளாக் கட்சி உசிலம்பட்டி முன்னாள் எம்எல்ஏ கதிரவன், செல்லம்பட்டி ஒன்றி செயலாளர் ராஜா, தேமுதிக தெற்கு மாவட்ட செயலாளர் கணபதி, தேமுதிக வழக்கறிஞரும் தொகுதி பொருப்பாளருமான ரவிச்சந்திரன்,செல்லம்பட்டி ஒன்றிசெயலாளர் சுரேஷ், சேடபட்டி ஒன்றிய செயலாளர் மகாலிங்கம், உசிலம்பட்டி ஒன்றிய செயலாளர் ஒய்.எஸ்.டி.சமுத்திரபாண்டி, உசிலம்பட்டி நகரசெயலாளர் அகோகன், கருமாத்தூர் பாண்டி, அழகுராஜா மற்றும் அதிமுக , தேமுதிக முக்கிய நிர்வாகிகள் தேர்தல் பிரச்சாரத்தில் உடனிருந்தனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!