9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில், அதிமுக வெற்றி பெறும்: அதிமுக முன்னாள் அமைச்சர்

உள்ளாட்சித்தேர்தலில் வாக்களித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
அதிமுகவின் 50 வது ஆண்டு பொன்விழா பரிசாக 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வெற்றி அமையும் என்றார் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
மதுரை மாவட்ட 16வது வார்டு மாவட்ட கவுன்சிலர் தேர்தல் மற்றும் டி.குன்னத்தூர் கிராம ஊராட்சி 4வது வார்டுக்கான தேர்தல் நடைபெற்றது. இதனை தொடர்ந்து டி.குன்னத்தூரில் உள்ள வாக்குச்சாவடியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார்.
பின்னப் செய்தியாளர்களிடம் ஆர்.பி. உதயகுமார் கூறியதாவது, தமிழகம் முழுவதும் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் சில மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தற்போது டி.குன்னத்தூர் கிராம ஊராட்சி வார்டு தேர்தலில் எனது குடும்பத்துடன் வாக்களித்து ஜனநாயக கடமை ஆற்றுவதற்காக பெருமையடைகிறேன்.
எம்.ஜி.ஆர் 1972 ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி அதிமுகவை ஏழை எளிய மக்களின் நலனை காக்கும் இயக்கமாக உருவாக்கினார். அதனைத் தொடர்ந்து 49 ஆண்டுகள் நிறைவு பெற்று இன்றைக்கு 50 ஆண்டு பொன் விழா காண்கிறது. இந்த பொன்விழா ஆண்டின் பரிசாக நடைபெறும் 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் மற்றும் தற்போது இங்கு நடைபெறும் தேர்தல்களில் மாபெரும் வெற்றியை இரட்டை இலைக்கு பரிசாக மக்கள் வழங்குவார்கள்.
நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 1 கோடியே 43 லட்சம் வாக்காளர்கள் மீண்டும் ஜெ.அரசு தொடர வேண்டும் என்று வாக்களித்தார்கள். அதுமட்டுமல்லாது 43 தொகுதிகளில் ஒரு லட்சத்து 92 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை நழுவ விட்டோம். மாணவர்களுக்கு மடிகணினியுடன் 14 வகை கல்வி உபகரணங்கள் பசிப்பிணி போக்கும் வகையில் 20 கிலோ அரிசி திட்டம் இப்படி பல தொலைநோக்கு திட்டங்களை ஜெயலலிதா. வழங்கினார்.அந்த திட்டங்களை வழங்குவதில் தற்போதைய நிலை என்ன என்பது கேள்விக்குறி ஆகியுள்ளது.
அதுமட்டுமல்லாது திமுக 505 தேர்தல் வாக்குறுதி கொடுத்தனர்.ஆனால் 202 வாக்குறிதிகளை நிறைவேற்றியதாக கூறுகிறனர்.திட்டங்களை மட்டும் அறிவிப்பதோடு சரி செயல்பாட்டில் இல்லை. தென்காசியில் நான் பிரசாரம் செய்யும் பொழுது மக்கள் அதிமுகவிற்கு மிகுந்த ஆதரவு அளித்தனர். அதுமட்டுமல்லாது தாய்மார்களுக்கு ஆயிரம் ரூபாய் தரவில்லை. கேஸ் மானியம் தரவில்லை. அதேபோல் கல்விக் கடன், கூட்டுறவுக் கடன் தள்ளுபடி வாக்குறுதி என்னாச்சு என்று திமுக மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
அதுமட்டுமல்லாது முதலமைச்சர் மதுரையில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் பெண்களுக்கு பேருந்து கட்டணம் இலவசம் என்று கூறினார். அப்போது ஒரு பெண் மதுரைக்கு செல்ல கட்டணம் வசூல் செய்கின்றனர் என்று கூறினார். முதலமைச்சர் நடவடிக்கை எடுத்தார். இப்படி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் சென்று அரசின் திட்டங்கள் குறித்து நடவடிக்கை எடுக்க முடியுமா எப்படி நிர்வாகம் செய்ய முடியும்.
தாய்மார்கள் தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், மாணவர்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் அரசு தங்கள் மீது அக்கறை செலுத்தவில்லை என்று மனக் கவலை அடைந்துள்ளனர்.ஆகவே ஊரக உள்ளாட்சி தேர்தலில் மக்கள் அதிமுகவிற்கு வாக்களித்து மிகப்பெரிய வெற்றியை தருவார்கள் என்று கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu