வாடிப்பட்டியில் அதிமுக பொதுக்கூட்டம்: முன்னாள் அமைச்சர் பங்கேற்பு
வாடிப்பட்டியில் பேரறிஞர் அண்ணாவின் 116 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.
பேரறிஞர் அண்ணாவின் 116 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி பேரூர் கழகம் சார்பில், வாடிப்பட்டி தாதம்பட்டி மந்தை திடலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு, வாடிப்பட்டி பேரூர் செயலாளர் அசோக்குமார் தலைமை தாங்கினார். ஒன்றியச் செயலாளர்கள் ரவிச்சந்திரன், கொரியர் கணேசன், மு.காளிதாஸ், அரியூர் ராதாகிருஷ்ணன் ,எம். வி .பி .ராஜா, யூனியன் சேர்மன் ராஜேஷ் கண்ணா,பேரூர் செயலாளர்கள் அழகுராஜா, முருகேசன்,வி. கே .குமார், மகளிர் அணி லட்சுமி,மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வாடிப்பட்டி பேரூர்அவைத் தலைவர் பரமசிவம்,பேரூர் துணைத் தலைவர் சந்தானதுரை, எம் ஜி ஆர் மன்ற செயலாளர் முத்து கண்ணன், பேரூர் அம்மா பேரவை செயலாளர் தனசேகரன், கச்சை கட்டி ரவி, ஒன்றிய அவைத் தலைவர் ஆர். எஸ் .ராமசாமி ஆகியோர் வரவேற்புரை ஆற்றினார்கள். கூட்டத்தில், முன்னாள் அமைச்சரும் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான, ஆர். பி. உதயகுமார் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இந்த நிகழ்ச்சியில், மாநில மாவட்ட நிர்வாகிகள் தமிழ்ச்செல்வன், திருப்பதி, முன்னாள் எம்எல்ஏக்கள் மாணிக்கம், தமிழரசன்,எஸ். எஸ். சரவணன், அம்மா பேரவை துணைச் செயலாளர்கள் வெற்றிவேல்துரை,தன் ராஜன், இளைஞர் அணி கவி காசிமாயன் விவசாய பிரிவு செயலாளர் ஆர் எஸ் ஆர் ராம்குமார், அலங்காநல்லூர் ஒன்றிய இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் மதன்,சத்திர வெள்ளாளப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சிதம்பரம், கல்லணை எஸ்.கே. ராஜா உள்பட அதிமுகவினர் திரளானோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu