அலங்காநல்லூரில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

அலங்காநல்லூரில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
X

அலங்காநல்லூரில், அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.

மதுரை அலங்காநல்லூரில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டாடினர்.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் கேட் கடை பகுதியில், அதிமுக ஒன்றியச் செயலாளர் கல்லணை ரவிச்சந்திரன், நகரச் செயலாளர்கள் அழகுராஜ், குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா ஆகியோர் முன்னிலையில் அதிமுகவினர் இனிப்பு வழங்கினார்.

அதிமுக பொதுச்செயலாளராக தொடர எடப்பாடி பழனிச்சாமிக்கு தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்தது. இதையடுத்து அலங்காநல்லூர் பகுதியில், பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி அதிமுகவினர் கொண்டாடினர்.

இதில் பேரூராட்சி கவுன்சிலர் நாட்டாமை சுந்தர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முடுவார்பட்டி மாணிக்கம், குட்டிமேய்கப்பட்டி சுரேஷ், வாவிட மருதூர் ஊராட்சி மன்றத் தலைவர் திருநாவுக்கரசு, கேட் கடை முரளி, கல்லணை மனோகரன், நிர்வாகிகள் பாஸ்கரன், வெள்ளை, கிருஷ்ணன், லதா செந்தில்குமார், கார்த்திகேயன், ராதாகிருஷ்ணன், முருகசுந்தரம், கேட்டு கடை ஆறுமுகம், சாமியார் கண்ணன், முன்னாள் கவுன்சிலர் பாஸ்கரன், கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags

Next Story
ai in future agriculture