மதுரை பேராயரிடம், அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் வாக்கு சேகரிப்பு
மதுரை அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணனக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வாக்கு சேகரித்தார்.
பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக வெளியேறியது நிரந்தரமாக இருக்க வேண்டுமென கத்தோலிக்க பேராயர் கேட்டுக் கொண்டுள்ளதாக, மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ அளித்த பேட்டியில் கூறினார்.
மதுரை மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் டாக்டர் சரவணன் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவுடன் இணைந்து கத்தோலிக்க மதுரை உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமியிடம் அதிமுகவிற்கு வாக்களிக்குமாறு ஆதரவு கோரினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறுகையில்: "மதுரையில் இருந்து வேளாங்கண்ணிக்கு நேரடியாக ரயில் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, வேட்பாளர் சரவணன் பேராயரிடம் வாக்குறுதி அளித்தார்.
பாஜக உடன் அதிமுக கூட்டணி வைத்த கசப்பான சம்பவங்களை பேராயர் எடுத்துக் கூறினார், சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வியுற்றது. சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தது கிறிஸ்தவ மக்களிடம் வருத்தத்தை ஏற்படுத்தியதாக பேராயர் கூறினார். பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது நிரந்தரமாக இருக்க வேண்டுமென, பேராயர் கேட்டுக்கொண்டார். அதிமுகவிற்கு கிறிஸ்தவ மக்களின் ஆதரவு அளிக்கப்படும் என வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.
நாடாளுமன்றத் தேர்தல் என்பது திருமண நிகழ்வை போன்றது அப்படி நடக்கும் நிகழ்விற்கு மோடி பிரதம அமைச்சர் என, எல்லோரும் வருவார்கள், திருமணத்திற்கு மாப்பிள்ளை யார் என்பதை மக்கள்தான் முடிவு செய்வார்கள் மதுரை தொகுதியின் மாப்பிள்ளை டாக்டர் சரவணன் என்பதை மக்கள் முடிவு செய்து விட்டார்கள். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி அடையும் என, டிடிவி கூறுவது எந்த இடத்தில் ஜோசியம் பார்த்து கூறுகிறார் என கூற வேண்டும் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu