மீண்டும் தமிழகத்தில் அதிமுக ஆட்சி ஏற்படும்: முன்னாள் அமைச்சர்

மீண்டும் தமிழகத்தில் அதிமுக ஆட்சி ஏற்படும்: முன்னாள் அமைச்சர்
X

, டி.குன்னத்தூரில் அமைந்துள்ள அம்மா திருக்கோவில் மணிமண்டபத்தில் உள்ள எம்.ஜி.ஆரின் உருவச் சிலைக்கு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

எம்ஜிஆர் எந்த நோக்கத்திற்காக இந்த இயக்கத்தை ஆரம்பித்தாரோ அதை அப்படியே ஜெயலலிதா கடைப்பிடித்தார்

மீண்டும் தமிழகத்தில் எடப்பாடியார் தலைமையில் ஜெயலலிதாவின் ஆட்சி மலர பாடுபடுவோம் என்றார் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நினைவு நாளில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார்.

பாரத ரத்னா டாக்டர் எம்ஜிஆர் 35 -ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில், டி.குன்னத்தூரில் அமைந்துள்ள அம்மா திருக்கோவில் மணிமண்டபத்தில் உள்ள எம்.ஜி.ஆரின் உருவச் சிலைக்கு மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாவட்ட கழக நிர்வாகிகள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் கிளைக் கழக, வார்டு கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து அவர் கூறியதாவது: கழக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க, அமரர் எம்ஜிஆரின் 35 வது ஆண்டு நினைவையொட்டி, தமிழகம் முழுவதும் கழக நிர்வாகிகள் எம்ஜிஆருக்கு புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். எம்ஜிஆர் இந்த இயக்கத்தை தோற்றுவித்து 51 ஆண்டுகள் ஆகிறது. இதில் ஏறத்தாழ 31 ஆண்டுகள் கழகம் சிறப்பான ஆட்சி செய்து மக்களுக்கான சிறந்த அரசாக இருந்தது.

எம்ஜிஆர் எந்த நோக்கத்திற்காக இந்த இயக்கத்தை ஆரம்பித்தாரோ, அதை ஜெயலலிதா கடைப்பிடித்தார். அதனை தொடர்ந்து இன்றைக்கு எடப்பாடியாரும் கடைப்பிடித்து இந்த இயக்கத்தை வழிவோடும், பொலிவோடும் சிறப்பாக வழி நடத்தி வருகிறார்.

இந்த 19மா தகால திமுக ஆட்சியில், எம்ஜிஆர்- ஜெயலலிதா ஆகியோரின் வரலாற்று திட்டங்கள் எல்லாம் திமுகவினர் முடக்கி விட்டனர். தொடர்ந்து விவசாயிகள் ,மாணவர்கள், இளைஞர்கள், தாய்மார்கள் என அனைத்து தர மக்களும் இந்த ஆட்சியில் பாதிக்கப்பட்ட வருகின்றனர். கடும் சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு விலைவாசி உயர்வு என அடுக்கடுக்கான மக்கள் மீது சுமைகளை திமுக அரசு சுமத்தி வருவதை கண்டித்து நாள்தோறும் கண்டித்து மக்களுக்காக குரல் எழுப்பி வருகிறார் எடப்பாடியார்.

திமுக அரசின் அவலங்களை எல்லாம், மக்களுக்கு தோல் உரித்து காட்டி மீண்டும் தமிழகத்தில் எடப்பாடியார் தலைமையிலான அரசு மலர்ந்திட அயராது களப்பணி ஆற்றுவோம் என்று எம்ஜிஆரின் 35 வது ஆண்டு நினைவு நாளில் உறுதிமொழி ஏற்கிறோம் என்று கூறினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!