அதிமுகவுக்கு, கொள்கை, கோட்பாடு உள்ளது: முன்னாள் அமைச்சர்

அதிமுகவுக்கு, கொள்கை, கோட்பாடு உள்ளது: முன்னாள் அமைச்சர்
X

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் காமராஜ் மற்றும் செல்லூர் ராஜு 

அதிமுக கொள்கை மற்றும் கோட்பாடு உடைய கட்சி. இது யாருக்கும் அடிமையானது கிடையாது என்று முன்னாள் அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களிடம் கூறினார்.

அதிமுகவிற்கென தனி கொள்கை, கோட்பாடு உள்ளது. அதிமுக நிமிர்ந்து நிற்கும் இயக்கம். யாருக்கும் கொத்தடிமை இல்லை. என்று முன்னாள் அமைச்சர் காமராஜ் மதுரையில் கூறினார்.

மதுரை:

அதிமுக சார்பாக வருக ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரை வளையங்குளம் பகுதியில் நடைபெற உள்ள அதிமுக பொன்விழா ஆண்டு மாநாடு நடைபெற உள்ள இடத்தை முன்னாள் அமைச்சர்கள் காமராஜ், விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் காமராஜ் கூறுகையில்:

மூன்றாம் தலைமுறையாக அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்று இருக்கக்கூடிய எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மதுரையில், எழுச்சிமிகு மாநாட்டை ஆகஸ்ட் 20ஆம் தேதி நடத்த உள்ளோம். மாநாட்டை நடத்துவதற்கு பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் உணவு குழுவை சேர்ந்த நாங்கள் இன்று வந்துள்ளோம். மாநாட்டிற்காக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள மிகச்சிறந்த சமையல் கலைஞர்களை ஆய்வு செய்து லட்சக்கணக்கான தொண்டர்களுக்கு ருசியான உணவை வழங்க உள்ளோம்.

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்று நடத்தப்படும் முதல் மாநாடு என்பதால் தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் பல குழுக்களை அமைத்து மிக பிரமாண்டமாக நடத்த அதிமுக தலைமை திட்டமிட்டு வருகிறது.

Tags

Next Story
நா.த.க. வேட்பாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு