வாக்கு சீட்டுகளை திமுகவினர் கிழித்து விட்டதாக மாவட்ட ஆட்சியரிடம் அதிமுக புகார்

வாக்கு சீட்டுகளை திமுகவினர் கிழித்து விட்டதாக மாவட்ட ஆட்சியரிடம்  அதிமுக புகார்
X

மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளிக்க வந்த நகராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் உமா விஜயன் 

திருமங்கலம் நகராட்சியில் தலைவர், துணைத்தலைவர் தேர்தலில் முறைகேடு நடந்ததாக அதிமுகவினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர்

திருமங்கலத்தில் ஓட்டு சீட்டுகளை கிழித்துவிட்டதாக ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம், திருமங்கலம் நகராட்சி த் தலைவருக்கான மறைமுகத் தேர்தலில், திமுக வினர் ஓட்டுச் சீட்டுகளை கிழித்துவிட்டதாக மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் அதிமுக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

திருமங்கலம் நகராட்சி அலுவலகத்தில், கடந்த 4ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்ட தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் திருமங்கலம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. திருமங்கலம் நகராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில், அதிமுக சார்பில் முன்னாள் நகர்மன்றத் தலைவர் உமா விஜயன் போட்டியிடுகிறார் .

திமுக சார்பில் ரம்யா முத்துக்குமார் ,தேமுதிக சார்பில் ராஜகுரு, தலைவர் பதவிக்கு போட்டியிடுகின்றனர். திருமங்கலம் நகராட்சியில் மொத்தம் உள்ள 27 வார்டுகளில், திமுக 18 இடங்களையும், அதிமுக 6 இடங்களையும், தேமுதிக 2 இடங்களிலும், காங்கிரஸ் 1 இடத்திலும் வெற்றி பெற்றிருந்தது. இதில் ,தேமுதிக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சின்னசாமி திமுகவில் இணைந்ததால் திமுகவின் பலம் 20 ஆக உயர்ந்தது.

இந்த நிலையில், 27 வார்டு உறுப்பினர்களும் இன்று நடைபெறும் மறைமுக தேர்தலுக்கு வருகை தந்தனர்., 21 வாக்குகள் பதிவான நிலையில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் நகர்மன்றத் தலைவர் உமா விஜயன் அதிமுக ஆதரவாளர்கள் தவிர 3 வாக்குகள் திமுகவைச் சேர்ந்த சில வார்டு உறுப்பினர்கள் வாக்களித்ததாக வெளியே காத்திருந்த சில நிர்வாகிகளுக்கு தகவல் வந்தது. இதனால், தேர்தலை புறக்கணிக்க கோரி அதிகாரிகளிடையே மோதல் ஏற்பட்டது. மேலும் ,வெளியே காத்திருந்த அதிமுக நிர்வாகிகளுக்கும் திமுக நிர்வாகிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதுகுறித்து, மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளிக்க வந்த நகராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் உமா விஜயன் செய்தியாளர்களிடம் கூறும்போது:

நகராட்சித்தலைவர் போட்டிக்கு போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்க்கு போடப்பட்ட ஓட்டுச் சீட்டுகளை திமுகவினர் கிழித்து விட்டார்கள்.அதிமுக சார்பாக போட்டியிட்ட உமா விஜயன் அதிக வாக்குகள் எண்ணிக்கையில் வந்ததால் ,திமுகவினர் ஓட்டுச் சீட்டுகளை கிழித்து விட்டனர்.

இது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனால் ,நாங்கள் தேர்தலைப் புறக்கணித்து உள்ளோம். காவல்துறையும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே, மதுரை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்து இருக்கிறோம். இதுகுறித்து ,மேலும் நாங்கள் எங்களது தலைமையிலும் கூறியிருக்கிறோம். சட்டம் முறையிலான போராட்டம் இதற்கு நாங்கள் முன்னெடுப்போம். இதனைத் தொடர்ந்து, இழுபறியில் இருந்த வாக்கு எண்ணிக்கை எண்ணப்பட்டு திமுக தரப்பில் போட்டியிட்ட ரம்யா முத்துக்குமார் 15 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி