தாய்மாமன் சீர் : அதிமுக வேட்பாளர் வாக்குறுதி அளித்து பிரசாரம்

தாய்மாமன் சீர் : அதிமுக வேட்பாளர் வாக்குறுதி  அளித்து பிரசாரம்
X

, திருமங்கலம் நகராட்சி 4வது நகர் மன்ற வார்டு பதவிக்கு போட்டியிடும் கலைச்செல்வி 

திருமங்கலம் நகராட்சி 4வது வார்டு அதிமுக வேட்பாளர் கலைச்செல்வி தாய்மாமன் சீர் செய்வதாக நூதன வாக்குறுதி வழங்கி பிரசாரம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் 4-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மக்கள் மனதை கவரும் வகையில் பிறந்த குழந்தைக்கு தாய்மாமன் கொடி கொழுசு சீர் வழங்குவதாக வாக்குறுதி அளித்து பிரசாரம் மேற்கொள்கிறார்.

மதுரை மாவட்டம், திருமங்கலம் நகராட்சி 4வது நகர் மன்ற வார்டு பதவிக்கு போட்டியிடும் கலைச்செல்வி மக்கள் மனதில் இடத்தை பிடிக்கும் வகையில் வாக்குறுதிகளை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

கலைச்செல்வியின் கணவர் அம்சமணி அதிமுகவில் பல ஆண்டுகாலம் இருந்து மக்களுக்காக பணியாற்றி வந்தார். அவரது பணியை தொடரும் வகையில் அவரது மனைவி கலைச்செல்வி திருமங்கலம் நகராட்சி 4வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

அதிமுக ஆட்சி காலத்தின் போது இப்பகுதியில் அம்சமணி நகர்மன்ற உறுப்பினராக பதவி வகித்த போது பொதுமக்களுக்கு தேவையான தெருவிளக்கு வசதி, சாலை வசதி, குடிநீர் வசதி ,போன்ற 100 % சதவிகிதம் பணிகளை நிறைவேற்றியுள்ளார். அதனடிப்படையில் அம்சமணியன் சாதனைகளை நினைவு கூர்ந்து கழக ஒருங்கிணைப்பாளர் முன்னாள் முதல்வர். எடப்பாடி கே. பழனிச்சாமி, முன்னாள் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அவர்களின் ஆணைக்கிணங்க திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஆர். பி .உதயகுமார் அவர்களின் உத்தரவின்பேரில் திருமங்கலம் நகர செயலாளர் ஜெ.டி. விஜயன் அவர்கள் வழிகாட்டுதலில் அம்சமணியின் மனைவி திருமதி.H. கலைச்செல்விக்கு மீண்டும் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் வாய்ப்பை வழங்கியுள்ளனர்.

திருமங்கலம் 4வது வார்டுக்குட்பட்ட குதிரை சாரி குளம் மம்சாபுரம் ஆகிய பகுதிகளில் ஏழை எளிய குடும்பத்தில் பிறந்த பெண்களுக்கு உதவிகள், ஏழைக்குடும்பத்தில் பயிலும் மாணவ மாணவியருக்கு படிப்பு உதவித்தொகை, மேலும் அப்பகுதியில் நீண்ட நாட்களாக மக்களின் உயிரை பலிவாங்கும் தேசிய நான்கு வழிச்சாலை குதிரை சாரி குளம் சந்திப்பில் தரைப்பாலம் அமைத்தல், நாடக மேடை அமைத்தல், மக்களின் நலனை கருத்தில் கொண்டு தெரு வீதிகள் அனைத்தும் கண்காணிப்பு கேமரா அமைத்தல், இ சேவை மையம், மக்கள் குறைதீர்ப்பு மையம், சாலை வசதி, குடிநீர் வசதி தெருவிளக்கு வசதி, பாதாள சாக்கடை திட்டம், மேலும் ஏழை குடும்பத்தில் பிரசவிக்கும் பெண்களுக்கு தன் சொந்த செலவில் உதவி மற்றும் பிறந்த குழந்தைக்கு தாய்மாமன் செய்யும் கொடி கொலுசு வழங்குவதாக வாக்குறுதிகளை நூதன முறையில் வழங்கி வாக்கு பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

பிரசாரத்தின்போது கலைச்செல்வி க்கு ஆதரவாக அப்பகுதி பெண்கள் அனைவரும் தானாக முன்வந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருவது மாற்று கட்சியினருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Tags

Next Story