மதுரை மாவட்டத்தில் அப்துல்கலாம் நினைவு நாள்: பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கல்

மதுரை மாவட்டத்தில் அப்துல்கலாம் நினைவு நாள்:  பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கல்
X
அப்துல் கலாம் நினைவு நாள் : மரக்கன்று நடவு:

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல்கலாமின் நினைவு நாளை முன்னிட்டு பசுமை இயக்கம் சார்பில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம், ஆறாம் ஆணடு நினைவு நாளை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் அப்துல் கலாம், திறந்து வைத்த தேவகி ஸ்கேன் மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்வில் பசுமை இயக்கம் சார்பாக சுமார் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கப்பட்டது.

இதில், மருத்துவமனை நிர்வாக இயக்குனர் நாகேந்திரன் மற்றும் பசுமை இயக்கம் சார்பாக ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் எம் எஸ் சி போஸ், பாஸ்கரன் ஆகியோர் முன்னிலையில், பசுமை இயக்கத்தின் பொறுப்பாளர்கள் பிரகாஷ் அகில் சத்தியா ரூப்க்குமார், பசுமை இயக்கத் தலைவர் சிவகுமார் தலைமையில், சுற்றுலா வழிகாட்டி டான்சிங் பிரபு உள்ளிட்டோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கும் பசுமை நலம் விரும்பிகளுக்கும் மரக்கன்றுகளை இலவசமாக வழங்கினர் .

இந்தியD ஒரு பசுமை நாடாக மாற வேண்டும் என்ற அப்துல்கலாமின் கனவை நிறைவேற்றுவதே, எங்கள் லட்சியம் என்று மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் நாகேந்திரன் குறிப்பிட்டார். இதையொட்டி டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமுக்கு அனைவரும் நினைவு அஞ்சலி செலுத்தினர்.

Tags

Next Story
வாடகை வீட்டை காலி செய்ய மறுத்ததால் மாநகராட்சி பில் கலெக்டர் மீீது புகார்!