திருமங்கலம் அருகே 105 வயது சகோதரியுடன் பிறந்த நாள் கொண்டாடிய 98வயது மூதாட்டி

திருமங்கலம் அருகே 105 வயது சகோதரியுடன் பிறந்த நாள் கொண்டாடிய 98வயது மூதாட்டி
X

பிறந்த நாளை கொண்டாடிய 98 வயது மற்றும் 105 வயது மூதாட்டிகள்.

திருமங்கலம் அருகே 105 வயது சகோதரியுடன் 98வயது மூதாட்டி பிறந்த நாள் விழா கொண்டாடினார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே 98 வயது மூதாட்டிக்கு பிறந்தநாள் கொண்டாடிய பேரன், பேத்திகளுடன் பிறந்தநாள் கொண்டாடும் மூதாட்டியின் 105 வயது சகோதரியும் உடன், இருந்து பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டது கிராமத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

மதுரை திருமங்கலம் அருகே கூடக்கோவில் கிராமத்தை சேர்ந்த ராசு - வேலாயி தம்பதியினர். இவர்களுக்கு 6 மகன்களும், 3 மகள்களும் என ஒன்பது பிள்ளைகள் உண்டு. 93 வயதில் ராசு இயற்கை எய்தினார். இந்நிலையில், பிள்ளைகளுடன் வசித்து வரும் வேலாயிக்கு வயது 98 ஆகிறது.

98 வயதான வேலாயி அம்மாளுக்கு, அவரது பிள்ளைகள் மற்றும் பேரன், பேத்திகள் பிறந்தநாள் கொண்டாட ஏற்பாடு செய்து , கூடக்கோவிலில் உள்ள வேலாயி அம்மாள் இல்லத்தில் பிறந்தநாள் விழா ஏற்பாடுகளை தடபுலாக செய்திருந்தனர் . வேலாயி அம்மாள் தனது மகன் மகன் வழிப்பேரன், பேரனின் மகன் ஆகியோர் ஏற்பாட்டின்படி, நான்கு தலைமுறைகள் கண்ட பாட்டி வேலாயி அம்மாள் தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார்.


வேலாயி அம்மாளின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நான்கு தலைமுறை பிள்ளைகள் உடனிருந்து வாழ்த்து பெற்றதோடு கூடுதல் சிறப்பாக வேலாயியுடன் அவரது சகோதரி கருப்பாயி அம்மாளும் பங்கேற்றது தான். சிறப்புக்கு காரணம் கருப்பாயி அம்மாளுக்கு வயது 105 ஆகிறது . 98 வயது மூதாட்டி பிறந்தநாள் விழாவில் 105 வயதான அவரது சகோதரியும் பங்கேற்று மகன்கள் பேரன் பேத்திகள் என அனைவரையும் வாழ்த்தியது கூடக்கோவில் கிராம மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்