தமிழகத்தில் 50 லட்சம் இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி உள்ளனர்: முன்னாள் அமைச்சர்

தமிழகத்தில் 50 லட்சம் இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி உள்ளனர்: முன்னாள் அமைச்சர்
X

மீட்கப்பட்ட ராணுவ வீரரான வினோத்குமாரின் உடலுக்கு மலரஞ்சலி வைத்து அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்த முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் 

மீட்கப்பட்ட ராணுவ வீரரான வினோத்குமாரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்த முன்னாள் அமைச்சர் உதயகுமார்

தமிழகத்தில் 50 லட்சம் இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி உள்ளனர் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேட்டி..

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே மேலக்கால் வைகை ஆற்றில் குளித்த இருவர் இரண்டு நாள்களுக்கு முன் மாயமான நிலையில், சோழவந்தான் தீயணைப்பு துறையினர் ஒருவரின் உடலை கைப்பற்றினர். தொடர்ந்து ராணுவ வீரரான மற்றொருவரின் உடலை தேடும் பணி நடைபெற்று வந்த நிலையில் இன்று காலை மேலக்கால் அருகே மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட ராணுவ வீரரான வினோத்குமாரின் உடலுக்கு மலரஞ்சலி வைத்து அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்த முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:

மதுரை மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்பு கொண்டு வைகை அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவை குறைக்க வலியுறுத்தியதன் பேரிலும் தண்ணீரை நிறுத்த சொல்லி பல்வேறு ஆலோசனைகளை வழங்கியதின் அடிப்படையில் தேடப்பட்ட ராணுவ வீரரின் உடல் இன்று காலை மீட்கப்பட்டது. உயிரிழந்த ராணுவ வீரர் வினோத்குமாரின் உடலுக்கு அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்தோம்.

உயிரிழந்த ராணுவ வீரர் உட்பட இருவரின் குடும்பத்திற்கு பேரிடர் மீட்பு நிதியிலிருந்து 10 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். மழைக்காலங்களில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழக அரசு போதை விழிப்புணர்வு மற்றும் செயல்களை விடுத்து போதை ஒழிப்பு பணியில் ஈடுபட வேண்டும் தமிழக முதல்வர் தீவிர கண்காணிப்பில் போதை பொருட்கள் ஒழிப்பை செயல்படுத்த வேண்டும்.

தமிழக அரசு யூரியா தட்டுப்பாடு மின்சார தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தட்டுப்பாடுகளாகவே உள்ளன என்று தெரிவித்தார். இதில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கணேசன், வாடிப்பட்டி யூனியன் தலைவர் ராஜேஷ் கண்ணா, வெற்றிவேல், அரியூர் ராதாகிருஷ்ணன், மேலக்கால் கிளைச் செயலாளர் காசிலிங்கம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!