மதுரையில் பதற்றமான 23 வாக்குச் சாவடிகள்: காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு
மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன்.
மதுரை மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது.
தமிழகத்தில் அக்டோபர் 9ம் தேதி (இன்று) இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலும் மற்றும் 12.10.2021 அன்று வாக்கு எண்ணிக்கையும் நடைபெற இருக்கிறது . இதில், மதுரை மாவட்டத்தில் இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தல் 64 இடங்களில் உள்ள 104 வாக்குச்சாவடிகளிலும் மற்றும் வாக்கு எண்ணிக்கை 5 மையங்களிலும் நடைபெற இருக்கிறது. தேர்தல் நடைபெற உள்ள 104 வாக்குச் சாவடிகளில் 23 வாக்குச்சாவடிகள் பதட்டமான வாக்குச்சாவடிகள் எனக் கண்டறியப்பட்டு அங்கு சார்பு ஆய்வாளர் தலைமையில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதே போல், ஒவ்வொரு 3 வாக்கு மையங்களுக்கும் ஒரு காவல் ஆய்வாளர் தலைமையிலும் ரோந்து செய்யவும், அதே போல் 5 வாக்கு மையங்களுக்கு ஒரு காவல் துணைக் கண்காணிப்பாளர் தலைமையிலும், மேலும், 20 வாக்கு மையங்களுக்கு ஒரு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 9 மொபைல்கள் நியமிக்கப்பட்டு தகுந்த பாதுகாப்புடன் சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் இருந்து வாக்குசாவடிகளுக்கு எடுத்து செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
ஊரக உள்ளாட்சிக்கான சாதாரண இடைத்தேர்தலை முன்னிட்டு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமையில் 3 கூடுதல் காவல் கண்காணிப்பாளர், 11 துணை காவல் கண்காணிப்பாளர், 30 காவல் ஆய்வாளர், 92 சார்பு ஆய்வாளர், 650 காவல் ஆளினர்கள் உட்பட 842 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்கள் பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu