வாடிப்பட்டி அருகே மேட்டு நீரேத்தான் துர்க்கை அம்மன் கோவில் திருவிழா

வாடிப்பட்டி அருகே மேட்டு நீரேத்தான்  துர்க்கை அம்மன் கோவில் திருவிழா
X

வாடிப்பட்டி அருகே மேட்டு நீரேத்தான், துர்க்கை அம்மன் ஆலய விழா சிறப்பாக நடைபெற்றது.

வாடிப்பட்டி அருகே மேட்டு நீரேத்தான் துர்க்கை அம்மன் கோவில் 220ம் ஆண்டு திருவிழா

மேட்டு நீரேத்தான் அருள்மிகு துர்க்கை அம்மன் கோவில் திருவிழா அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே மேட்டு நீரேத்தானில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்மன் திருக்கோவில் 220 ஆம் ஆண்டு திருவிழா கடந்த 29ஆம் தேதி சாமி சாட்டுதளுடன் தொடங்கியது. தொடர்ந்து, கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேகம் மற்றும் தாமிர கவசம் சாத்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது . கடந்த 3ஆம் தேதி திங்கட்கிழமை சந்தன காப்பு அலங்காரம் பூச்சொரிதல் விழா நடைபெற்றது. மதியம் அன்னதானம் 4ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை, துர்க்கை அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி நீரேத்தான் கிராமத்தில் இருந்து மேட்டு நீரேத்தான் கிராமத்தில் எழுந்தருளினார் .

அதனைத் தொடர்ந்து, நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர் .இன்று மாலை மேட்டு நீரே தான் மந்தையிலிருந்து, பொதுமக்கள் பால்குடம் அக்னி சட்டி எடுத்து கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதற்கான ஏற்பாடுகளைச் கிராமத்தினர்செய்திருந்தனர். சோழவந்தான் காவல் ஆய்வாளர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்

Tags

Next Story
Sudden Halt in Pongal Package Distribution at Erode East Ration Shops..!