மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே, காலிக் குடங்களுடன் சாலை மறியல்

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே, காலிக் குடங்களுடன் சாலை மறியல்
X

குடிநீர் கேட்டு சாலைமறியலில் ஈடுபட்ட திடீர் நகர் பொதுமக்கள் 

மாநகராட்சி சார்பில் குடிநீர் விநியோகம் செய்யக் கோரி திடீர்நகர் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மதுரை மாநகராட்சி சார்பில், வார்டுகள் தோறும் குடிநீர் குழாய்கள் மூலம் மற்றும் லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள திடீர் நகரில் கடந்த சில நாட்களாக குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை என கூறப்படுகிறது

இதைக் கண்டித்து, அப்பகுதி மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களும் பேசினர். விரைவில் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறியதையடுத்து மறியலை கைவிட்டனர்

Tags

Next Story
ai automation in agriculture