சோழவந்தானில் விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம்

சோழவந்தானில் விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம்
X

சோழவந்தான் ஆர் எம் எஸ் காலனியில் விநாயகர் ஆலய குடமுழுக்கு.

புனித நீர் குடங்களை எடுத்து வலம் வந்து விநாயகருக்கு பல்வேறு அபிஷேகம் நடந்து மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது

சோழவந்தான் கற்பகம் காட்டன் ஆர்எம்எஸ். காலனி கற்பக விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது

மதுரை அருகே சோழவந்தான் கற்பகம் கார்டன்ஸ் ஆர். எம். எஸ். காலனியில் உள்ள கற்ப விநாயகர் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, தென்கரை பாலாஜி பட்டர் தலைமையில் இரண்டு நாள் யாக பூஜை நடைபெற்றது. இவ்விழா முன்னிட்டு இன்று அதிகாலை இரண்டாம் கால யாக பூஜை தொடங்கப்பட்டு, பூர்ணாஹூதி நடந்தது .

இதைத் தொடர்ந்து, புனித நீர் குடங்களை எடுத்து வலம் வந்து விநாயகருக்கு பல்வேறு அபிஷேகம் நடந்து மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஆர்எம்எஸ். காலனி குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் தலைவர் செல்வம், செயலாளர் தனசேகரன், பொருளாளர் செல்வன் மற்றும் குடியிருப்போர்நல சங்கம் சார்பாக விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

கோவிலில் குடமுழுக்கு செய்வதன் காரணங்கள் எவை?

புதிதாக ஒரு ஆலயம் நிர்ணயிக்கப்பட்டால் அதை கட்டி முடித்தபின் குடமுழுக்கு அல்லது கும்பாபிஷேகம் செய்வித்தல் என்பது ஒரு வழக்கம்.

மேலும் கோவிலுக்கு 12 வருடங்களுக்கு ஒரு முறை குடமுழுக்கு அல்லது கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்பது ஒரு வழக்கம்.குரு ஒவ்வொரு ராசியிலும் சுமார் ஒரு வருடம் வீதம் 12 ராசிகளை சுற்றி வர 12 வருடங்கள் ஆகும்.இது வானியல் அடிப்படையாகக் கொண்டது ஜோதிட பலா பலன் அல்ல.

சைவர்களாக இருப்பின் அவர்கள் இந்த குடமுழுக்கை,மகா கும்பாபிஷேகம்.வைணவர்களாக இருப்பின் அவர்கள் இந்த குடமுழுக்கை,மகா சம்ரோஷனம்.என்று அழைப்பர்.

பழமையான கோவில் என்பது எந்த வகையில் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்தாலும் அது ஒரு யந்திர வடிவத்தில் அமைந்துள்ளதாகும்.ஏனென்றால் பெருவாரியான மக்கள் உள்ளே வந்து சொல்லும்பொழுது கோவிலின் சக்தி மூலம், அது நாளுக்கு நாள் தேய்ந்து வரும்.

ஒவ்வொரு கோவிலும் தினசரி பூஜை முறை என்று வழக்கத்தில் உண்டு அவை மூலம் இழந்த சக்தியை அன்றாடம் சுத்திகரித்து நிலைநிறுத்தும் ஒரு வழிமுறையாகும்.அப்படி செய்தபோதும் 12 வருடத்தில் அதன் சக்தி பெரும்பாலும் முழுவதும் குறைந்துவிடும்.

குறைந்த சக்தியை புதுப்பித்து, கோவில் கட்டிடங்கள் சேதங்கள் ஏதும் ஏற்பட்டு இருப்பின் அவைகள் அனைத்தும் சரி செய்யப்பட்டு கோயில் முழுமையாக புதுப்பிக்கப்பட்டு குடமுழுக்கு செய்யப்பட்டு புதிதாக சக்தி அந்த கோவிலுக்கு ஊட்டப்படும்.குறிப்பாக கோவிலில் கலசத்தில் நிரப்பப்பட்டுள்ள தானியங்களை மாற்றம் செய்வர்.

வரகு அரிசி போன்ற தானியங்கள் அடுத்த 12 வருடங்களுக்கு கோபுர கலசத்தில் கெடாமல் பாதுகாக்கப்படுகிறது.பஞ்சம் அல்லது இயற்கை சீற்றங்களால் பயிர்களுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டாலும் கோபுர கலசத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தானியங்களை எடுத்து பயிரிட்டு மறுபடியும் பழைய நிலைக்கு திரும்புவதற்கு ஒரு வாய்ப்பாக ஏற்படுத்தியுள்ளார்கள்.

உள்ளபடியே அந்த கோபுர கலசத்தின் வடிவம் கூம்பு போன்ற அமைப்பு கோவிலில் அமைந்துள்ள சக்தியை சுத்திகரிக்கும் ஒருமுறையாகும்.நான்கு திசைகளிலும் நான்கு வாயில், உள்ளே ஒரு சக்தி மையம், அந்த சக்தி மையத்தை தக்கவைத்துக்கொள்ளும் விதமாக, யந்திர சாஸ்திர அடிப்படையில் கட்டப்பட்டுள்ள கட்டிடகலையால் உருவாக்கப்பட்ட ஒரு நேர்மறை சக்தி கொண்டுள்ள பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளும் ஒரு சக்தி மூலம்.

பழமையான கோவில் என்று எடுத்துக் கொண்டால் அவை ஆகம விதிப்படி அமைக்கப் பட்டுள்ளதா அல்லது சித்தர் வழி, யோக விஞ்ஞானப்படி நிர்மானிக்கப்பட்டுள்ள கோயிலா என்ற வகையில் பிரிக்கலாம். பொதுவாக ஆகம முறைப்படி கட்டப்பட்ட கோவில்கள் பனிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை குடமுழுக்கு செய்ய வேண்டும் என்பது வழக்கத்தில் உள்ள ஒரு முறையாகும்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!