துணிவு திரைப்படம் சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியீடு: அதிர்ச்சியில் திரையுலகம்

துணிவு திரைப்படம்  சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியீடு: அதிர்ச்சியில் திரையுலகம்
X

சட்டவிரோதமாக இணையத்தில் வெளியான துணிவு திரைப்படக்காட்சி

துணிவு திரைப்படம் சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியானதால் படக்குழுவினரும் ரசிகர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்

துணிவு திரைப்படம் சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியீடு படக்குழுவினரும் ரசிகர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

உலகம் முழுவதும் ஒரே நாளில் நடிகர் அஜித்தின் துணிவு மற்றும் விஜயின் திரைப்பட த்தை 8 வருடங்களுக்குப் பிறகு களம் காண்பதால், திரையரங்கு வாசல்கள் அனைத்தையும் இரு ரசிகர்களும் அதிரவிட்டு வருகின்றனர். மதுரையில் மொத்தமாக உள்ள 34 திரையரங்குகளில் 47 திரைகளில் துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்கள் இன்று வெளியாகிகின.

இன்று அதிகாலை 1மணிக்கு துணிவும், 4 மணிக்கு வாரிசு திரையிடப்பட்டு ரசிகர்கள் சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில், துணிவின் திரைப்படம் சட்டவிரோதமாக இணையதளங்களில் எச்டி குவாலிட்டியில் வெளியாகி இருப்பது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து ,அதிக தொழிலாளர்கள் உழைப்பிலும் பொருள் செலவிலும் தயாரியுள்ள தயாராகியுள்ள துணிவு இணையதளத்தில் சட்டவிரோதமாக வெளியாகி இருப்பது அஜித் ரசிகர்கள் மட்டுமல்லாமல் படக்குழுவினர்கள் கடும் அதிர்ச்சியில் இருந்து வருகின்றனர்.

Tags

Next Story