பிச்சை எடுத்து வறுமையால் காலமான கமலுடன் நடித்த துணை நடிகர்
இறந்த துணை நடிகர்( வட்டம் இட்டு காட்டப்பட்டுள்ளது.)
கமலின் அபூர்வ சகோதர்கள் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்த துணை நடிகர் வறுமையின் காரணமாக , மதுரை அருகே திருப்பரங்குன்றம் பெரிய ரதவீதியில் காலமானார்.
சேலம் மாவட்டம், மேட்டுரை சேர்ந்தவர் சின்னு. இவரது இளைய மகன் மோகன் (வயது 60). திருமணமாகாதவர். திரைப்படங்களில் துணை நடிகராக கமல்ஹாசன் நடித்த அபூர்வ சகோதரர்கள் திரைப் படத்தில் குள்ள அப்பு (கமல்) நண்பர்களில் ஒருவராக நடித்துள்ளார்.
மேலும், நான் கடவுள், அதிசய மனிதர்கள் உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இறந்த மோகனுக்கு , திரைப்பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் திருப்பரங்குன்றம் பெரிய ரதவீதியில் பிச்சை எடுத்து சாப்பிட்டு வந்துள்ளார். இந்நிலையில், இன்று காலை பெரிய ரத வீதியில் மோகன் இறந்து கிடந்ததை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, போலீசார் இறந்த மோகனின் உடலை உடற்கூறு பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த மோகனுக்கு 2 சகோதார்கள், 5 சகோதரிகள் உள்ளனராம்.
இறந்த மோகனுடைய உடலை இலவச ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும்போது வரும் பணத்தை சேமித்து வைத்துக்கொள்ளவேண்டியது அவசியம். துணை நடிகர்களுக்கு எப்போதுமே வாய்ப்புகள் கைகொடுக்கும் என்று நம்பி இருப்பது சரியானதல்ல. அல்லது கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் பெரிய நடிகர்கள் துணை நடிகர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவிகள் செய்யலாம். அது நேரடி பண உதவியாக இல்லாமல் அவர்களின் வாழ்க்கைக்கு உதவும் வகையிலான உதவிகள்.
வருமான வாய்ப்புகளை உருவாக்கும் சிறிய பெட்டிக்கடை அல்லது அவர்களுக்குத் தெரிந்த ஏதாவது ஒரு தொழிலை ஏற்படுத்திக்கொடுக்கலாம். தற்போது உள்ள சிறிய கலைஞர்கள் வாய்ப்புகள் கிடைக்கும்போது ஏதாவது ஒரு தொழில் அல்லது வருவாய்க்கு ஏற்ப நிலம் போன்ற சொத்துக்களை வாங்கலாம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu