திருப்பரங்குன்றம் அருகே சாலையோரக் கால்வாயில் மிதந்த பெண் சடலம்

திருப்பரங்குன்றம் அருகே சாலையோரக் கால்வாயில் மிதந்த பெண் சடலம்
X

பைல் படம்.

திருப்பரங்குன்றம் அருகே சாலையோரம் கிடந்த சிதைந்த பெண் சடலம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் கணபதி நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் சாலையோர கழிவுநீர் கால்வாயில் சடலம் மிதப்பதாக அவனியாபுரம் போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவனியாபுரம் போலீசார் கழிவுநீர் கால்வாயில் மிதந்த சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர்.

இதனைத்தொடர்ந்து கால்வாயில் மிதந்தது சுமார் 50 வயதிற்கு மேற்பட்ட பெண் சடலம் என்றும், ஒரு வாரத்திற்கும் மேலாக கால்வாயில் மூழ்கியதால் முகம் அடையாளம் தெரியவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

இறந்தவர் யார்? எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்? யாரேனும் கொலை செய்தார்களா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் காணாமல் போனவர்கள் பற்றி உள்ள தகவலை விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்