மதுரையில் சிறப்பு ஒமிக்ரான் வைரஸ் கட்டுக்குள் வர வேண்டி சிறப்பு பூஜை
ஒமிக்ரான் வைரஸ் பரவாமல் தடுக்க சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது
கொரோனா வைரஸ் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியா முழுவதும் பரவி பெரிய அளவை பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், தற்சமயம், அதனை கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட வழிமுறைகளால் கட்டுப்பாடுத்த அரசு தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த நிலையில், வைரஸ் புது வடிவம் பெற்று ஒமிக்கிரான் என்ற வைரஸ் உலகம் முழுவதும் பரவ தொடங்கியுள்ளது. பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
கொரோனா வைரஸ் புதிய வடிவமாக வீரியமிக்கதாக 15க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவ தொடங்கியுள்ள ஒமிக்கிரான் வைரஸ் இந்தியாவைத் தாக்காமல் இருக்க, மதுரை எஸ். எஸ். காலனி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், காஞ்சி மகா பெரியவருக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
குறிப்பாக இந்த புதுவித வைரஸ் இந்தியா முழுவதும் பரவாமல் இருப்பதற்காகவும் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாமல் இருப்பதற்காகவும் அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு தலைமையில், சிறப்பு பிராத்தனை நடைபெற்றது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu