மதுரையில் நடைபயிற்சி சிறப்பு முகாம்..!
மதுரையில் நடந்த நடப்போம் நலம்பெறுவோம் நிகழ்ச்சி
மதுரை:
மதுரையில் நடந்த நடைப்பயிற்சி சிறப்பு முகாமில் வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் பி.மூர்த்தி தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பாக (04.11.2023) சென்னை,பெசண்ட் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காணொளிக் காட்சி வாயிலாக அனைத்து மாவட்டங்களிலும் "நடப்போம் நலம் பெறுவோம்" என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார்கள்.
இதனையடுத்து ,மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடைபெற்ற "நடப்போம் – நலம் பெறுவோம் நிகழ்ச்சியில், வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் பி.மூர்த்தி , தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் பங்கேற்றார்கள்.
உலக சுகாதார அமைப்பின் தரவுகள்படி உடற்பயிற்சி செய்வது நீரிழிவு மற்றும் இரத்த அழுத்த நோய்களின் தாக்கத்தை 27 சதவீதமும், இதய நோயின் தாக்கத்தை 30 சதவீதமும் குறைக்கின்றது என்று அறியப்படுகிறது. நடைபயிற்சியானது மக்களை சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமான எடையுடன் இருக்கவும் நாள்பட்ட உடல் பிரச்சினைகள் மற்றும் மன அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது.
அதன்படி கடந்த ஆண்டு நடைபெற்ற மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை மானியக் கோரிக்கையின் போது, 'நடப்போம்; நலம் பெறுவோம்’ என்பதற்கிணங்க பொதுமக்களின் நலன் மற்றும் ஆரோக்யத்தைக் கருத்தில் கொண்டு, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து 8 கி.மீ. தூரம் கொண்ட நடைபாதையைக் கண்டறிந்து, ஆரோக்கியமான நடைபயிற்சி மேற்கொள்வதற்கான நடைபாதைகள் ஏற்படுத்தப்படும் என, அறிவிக்கப்பட்டது.
மக்கள் நலம் பேணும் இந்த மகத்தான திட்டம் தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களிலும் சிறப்புற நிறைவுற்று, அதன் தொடக்க விழா இன்று (4.11.2023 – சனிக்கிழமை) காலை நடைபெற்றது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்கள்.
தொடர்ந்து, மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் பி.மூர்த்தி , தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் பங்கேற்றார்கள்.
மதுரை மாவட்டத்தில், "நடப்போம் நலம் பெறுவோம்" திட்டத்தின் கீழ்இ நடைப்பயிற்சியை ஊக்குவிக்கும் வகையில் ,மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானம் நுழைவு வாயில் முதல் தொடங்கி ஐய்யர் பங்களா சந்திப்பு வழியாக மீண்டும் ரேஸ்கோர்ஸ் மைதானம் நுழைவு வாயில் வந்தடையும் தூரம் மொத்தம் (8கி.மி) கொண்ட பாதையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நடைபாதையில், பயணிப்பவர்களுக்கு வாகனங்கள் நிறுத்த போதிய இடவசதி, ஓய்வறைகள், இருக்கை வசதிகள், கழிப்பறை வசதிகள் அனைத்தும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வழித்தடம் அனைவருக்கும் பாதுகாப்பானதாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில், மாவட்ட ஆட்சித் தலைவர் மா. சௌ. சங்கீதா மாநகர காவல் ஆணையர் முனைவர். ஜெ.லோகநாதன், மாநகராட்சி ஆணையாளர் லி.மதுபாலன், கூடுதல் ஆட்சியர் மோனிகா ராணா, மாவட்ட வருவாய் அலுவலர் ர.சக்திவேல் மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ. வெங்கடேசன் , மதுரை அரசு மருத்தவக்கல்லூரி முதல்வர் மரு. ரத்தினவேல், மாநகராட்சி, மாநகராட்சி நகர் நல அலுவலர் வினோத் , துணை மேயர் தி.நாகராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu