சோழவந்தான் பகுதிகளில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்..!

சோழவந்தான் பகுதிகளில்  குடியரசு தினவிழா கொண்டாட்டம்..!
X

மதுரை மாவட்டம் ,சோழவந்தான் அருகே கல்வி பொதுப்பள்ளியில், நடைபெற்ற குடியரசு தின விழா.

சோழவந்தான் பகுதிகளில் காங்கிரஸ் சார்பிலும் மற்றும் சர்வதேச பள்ளியிலும் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.

சோழவந்தான் காங்கிரஸ் சார்பில் குடியரசு தின விழா:

சோழவந்தான்:

மதுரை மாவட்டம், சோழவந்தானில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. சோழவந்தானில் உள்ள வ உ சி சிலை மற்றும் காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, சோழவந்தானில் காமராஜர் சிலை, வ உ சி சிலை அருகே, பேருந்து நிலையம் பகுதி, மாரியம்மன் கோவில் பகுதி, தலைமை தபால் நிலையம் அருகே உள்ள கொடி மரங்களில் காங்கிரஸ் கொடியேற்றி வந்தே மாதரம் கோஷங்கள் எழுப்பி கொடி வணக்கம் செய்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி, சோழவந்தான் நகரத் தலைவர் முத்துப்பாண்டி தலைமையில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

இதில், வட்டாரத் தலைவர் பழனிவேல், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரா.மூர்த்தி,எஸ். சி. துறை மாநில துணைத்தலைவர் சங்கரபாண்டி, எஸ் சி துறை மதுரை வடக்கு மாவட்டத் தலைவர் ராஜா, இ.காங்கிரஸ் செயலாளர் இளவரசன், நகரச் செயலாளர் சேகரன், நகர பொருளாளர் பரமசிவம், டெய்லர் ரவி, பந்தல்சுந்தரம், சோமு, வசந்த், செல்வகுமார், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

சர்வதேச பொதுப்பள்ளியில் 75-வது குடியரசு தின விழா நடைபெற்றது.

சோழவந்தான்:

மதுரை மாவட்டம், சோழவந்தான் கல்வி சர்வதேச பொது பள்ளி மைதானத்தில் நடந்த 75-வது குடியரசு தின விழாவில் பள்ளி துணை முதல்வர் திருமதி அபிராமி அவர்கள் தேசிய கொடியினை ஏற்றி வைத்தார். இதனை தொடர்ந்து, மாணவர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் அலுவலக பணியாளர்கள் உறுதி மொழி ஏற்றனர்.

பின்னர், சிபிஸ்இ பள்ளிகளுக்கு இடையேயான டாக்குவாண்டோ தென் மண்டல போட்டிகள் மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு போட்டி சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை பள்ளி உயர்கல்வி துறை ஆசிரியர்கள் வழங்கி கௌரவித்தனர்.

Tags

Next Story
மாணவனின் துயர சம்பவம்: கிணற்றில் குளிக்கும் போது உயிரிழப்பு - மரக்கட்டை விழுந்து விபத்து