தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின், மதுரை மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்..!

தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின், மதுரை மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்..!
X

தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின், மதுரை மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம்.

தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கத்தின் மதுரை மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மாவட்ட தலைவர் தலைமையில் நடந்தது.

மதுரை :

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கத்தின் மதுரை மாவட்ட புதிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அறிமுக கூட்டம் மாநிலத் தலைவர் சரவணன் வழிகாட்டுதலின் பேரில், மாவட்டத் தலைவர் கணேஷ் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட துணைத்தலைவர்கள் மாயகிருஷ்ணன், பாலமுருகன், கதிரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைச்செயலாளர்கள் புஷ்பராஜன், சுரேஷ்பாபு ஆகியோர் வரவேற்று பேசினர். மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திர பாண்டியன் ,புதிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை அறிமுகபடுத்தி சால்வை அணிவித்து கௌரவித்தார். சங்கத்தின் சட்ட ஆலோசகர் மதுரை உயர்நீதி மன்ற கிளை வழக்குரைஞர் அய்யப்பராஜா சிறப்புரை வழங்கினார்.

மாவட்ட பொருளாளர் கவிதாகணேஷ் வாழ்த்துரை வழங்கினார். இணைச் செயலாளர்கள் பாண்டியன், பிரேம்குமார், சிதம்பரம், ஜெயராமன் ஆகியோர் சங்க செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சிக்கான ஆலோசனைகள் வழங்கி பேசினர்.

மாவட்டத் தலைவர் கணேஷ் பேசுகையில்:

அச்சு ஊடக செய்தியாளர்களுக்கு தனி அறை வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஏற்கனவே, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தோம். அந்த கோரிக்கையை முழு வீச்சில் செயல்பட்டு நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். செய்தியாளர்கள் செய்தி சேகரிக்கும் களத்தில் செய்தியாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை வன்மையாக கண்டிப்பது மட்டுமல்லாமல் செய்தியாளர்களின் பாதுகாப்பிற்காக குரல் கொடுப்போம்.

மேலும், செய்தியாளர்களுக்கான விபத்து காப்பீடு வழங்குவது குறித்து மாநில தலைவரிடம் வலியுறுத்திவோம். மாவட்ட செய்தியாளர்களுக்கு கிடைக்கின்ற அனைத்து அரசு சலுகைகளும் தாலுக்கா செய்தியாளர்களுக்கு கிடைக்க முயற்சி செய்வோம் என்று குறிப்பிட்டார்.

கூட்டத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜான்சுந்தர், ராஜேஷ்கண்ணன், நாகேந்திரன், மேலூர் சுரேஷ், சரவணன், கார்த்திக், வெங்கடேஷ் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். கௌரவ தலைவர் ராமமூர்த்தி, உறுப்பினர்கள் அல்லாபக்ஸ், கார்த்திக், மதுரை வீரன், சேவுகன், மூர்த்தி, ராமசாமி, சண்முகவேல், மணிகண்டராஜா, சமயசெல்வம், ராமர், பாலமுருகன் கார்த்திகேயன், சிதம்பரம் முத்துமாரி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணைசெயலாளர் முருகேசன் நன்றி கூறினார்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா